PLUS TWO: மதிப்பெண் சான்றிதழ்: JULY 22 முதல் இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்..!! - Tamil Crowd (Health Care)

PLUS TWO: மதிப்பெண் சான்றிதழ்: JULY 22 முதல் இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்..!!

 PLUS TWO: மதிப்பெண் சான்றிதழ்: JULY 22 முதல் இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்..!!

தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி PLUS TWO மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியானது. மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அதேபோல்

www.dge.tn.gov.in, 
www.dge.tn.nic.in 

ஆகிய இணையதளங்களில் JULY  22 முதல் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (22.07.2021) காலை 11 மணிமுதல் மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. PLUS TWO  மாணவர்களின் மதிப்பெண்கள் முதல்முறையாக தசம எண்களிலும் கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment