PLUS TWO பொதுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம் பேட்டி..!!
”PLUS TWO பொதுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும். இல்லையென்றால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதில் குளறுபடி ஏற்படும்,” என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்தார்.
அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரண்டு தடுப்பூசிகளை தவிர மற்றவற்றை அனுமதிக்காதது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது போன்றவையே தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு காரணம். தடுப்பூசி விவகாரத்தில் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே மத்திய BJP அரசு வஞ்சித்துவிட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
PLUS TWO தேர்வு நடைபெறுமா.? ரத்தாகுமா.?
கரோனாவை CORONA கட்டுப்படுத்த ஊரடங்கு ஒரு வழியாக இருந்தாலும், தடுப்பூசியே நிரந்தர தீர்வு. மத்திய அரசின் CENTREL GOVERNMENT தவறான பொருளாதார கொள்கையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். இந்த விலை உயர்வு சாமானியர்களை தான் பாதிக்கிறது.
NEET தேர்வு நகர்ப்புற மாணவர்களுக்கு எளிதாகவும், கிராமப்புற மாணவர்களுக்கு சிரமமாகவும் உள்ளது. இதனால் NEET தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. அது தொடர வேண்டும்.
PLUS TWOபொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும். தேர்வு நடத்தாமல் ஏதோவொரு முறையில் மதிப்பெண்கள் வழங்கினால் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
இதனால் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது. மேலும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையிலும் குளறுபடி ஏற்படும், என்று கூறினார்.