Plus Two பொதுத்தேர்வு-முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் என்பது வெளியிடப்படும்: அன்பில் மகேஷ்..!!
தமிழகத்தில் Plus Two தேர்வு எப்போது நடத்துவது முக்கிய பாடங்களுக்கு மட்டும் நடத்துவதா..? என்று மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்தது. மத்திய அரசு விளக்கம் கேட்டு இருந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த செய்தியையும் படிங்க…
இரத்த வெள்ளையணுக்களை(WBC) அதிகரிக்க- எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் .!!
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், Plus Two பொதுத்தேர்வில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் என்பது வெளியிடப்படும். பின்னர், தமிழகத்தின் கருத்துக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நீட் (NEET) தேர்வு தமிழகத்தில் கிடையாது, தமிழக சட்டப் பேரவை கூடியதும் இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.