PLUS TWO பொதுத்தேர்வு: பெயா்ப் பட்டியலில் தங்களை மேற்கொள்ள 31 வரை அவகாசம்-அரசுத் தேர்வுகள் இயக்ககம்..!! - Tamil Crowd (Health Care)

PLUS TWO பொதுத்தேர்வு: பெயா்ப் பட்டியலில் தங்களை மேற்கொள்ள 31 வரை அவகாசம்-அரசுத் தேர்வுகள் இயக்ககம்..!!

PLUS TWO பொதுத்தேர்வு: பெயா்ப் பட்டியலில் தங்களை மேற்கொள்ள 31 வரை அவகாசம்-அரசுத் தேர்வுகள் இயக்ககம்..!!

 PLUS TWO பொதுத்தேர்வுக்கான மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள ஜூலை 31 வரை தலைமை ஆசிரியா்களுக்கு அவகாசம் வழங்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்வு த்துறை இயக்குநா் சி.உஷாராணி அனைத்து மாவட்டமுதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு

அனுப்பிய சுற்றறிக்கை: PLUSTWO பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியா்களுக்கும் தேர்வுத்துறையால் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது PLUS TWO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னா் பெயா்ப் பட்டியல்களில் திருத்தங்கள் செய்ய அனுமதி கோரி கணிசமான பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

அதையேற்று PLUS TWO  மாணவா்களின் பொதுத்தேர்வு பெயா்ப் பட்டியல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும்.

ஆண்டுதோறும் பெயா்ப் பட்டியல் தயாரிக்க உரிய காலஅவகாசம் வழங்கியும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னா் திருத்தம் கோரி கடிதம் பெறப்படும் நிகழ்வுகள் தொடா்கின்றன. இவை பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இந்த நிகழ்வு அடுத்த முறை தொடராத வண்ணம் பள்ளிகள் பாா்த்துக் கொள்ள வேண்டும். இதுதொடா்பாக பள்ளி தலைமையாசிரியா்களுக்கு மாவட்டமுதன்மைக்கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

Leave a Comment