PLUS TWO தேர்வு: தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும்..!!
PLUS TWO தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
PLUS TWO தேர்வு நடைபெறுமா.? ரத்தாகுமா.?
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, CBSE. PLUS TWO தேர்வை ரத்துசெய்ய முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு CENTREL GOVERNMENT தெரிவித்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகவே முடியும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு TAMIL NADU GOVERNMENTமுடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கட்டமைப்பின்படி, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வுகளுக்கும் ENTERENCE EXAM, வெளிநாடுகளில் கல்வி பயில விண்ணப்பிப்பதற்கும், வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெறுவதற்கும் +2 மதிப்பெண் அவசியமானதாகிறது.
பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத் தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும். கரோனா CORONA இரண்டாம் அலை தணிந்ததும், மூன்றாம் அலை ஏற்படுவதற்கு முன்னதாக அனைத்து முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்பான சூழலில் தேர்வு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே சரியானது.
நோய்த்தொற்றின் வேகம் குறைந்ததும், தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டு, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கான கால அவகாசம் வழங்கலாம். அதற்கு முன், நடப்புக் கல்வியாண்டிற்கான பாடங்கள் ONLINE CLASS மூலம் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டனவா.? என்பதை உறுதி செய்துகொள்வது மிக அவசியம்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!
தேவையிருப்பின், தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அளவைக் குறைக்கலாம். முன்களப்பணியாளர்கள் என்ற வகையில் ஆசியர்களுக்கு கரோனா CORONA தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன. அப்படியே +2 தேர்வெழுதும் மாணவர்களுக்கும் கொரோனா CORONA தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்து அவர்களைப் பாதுகாக்கலாம். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Super sir.. I support sir..