Plus Two தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு- தேசிய தகுதி தேர்வுகள்& நுழைவு தேர்வுகளை ரத்து செய்யாதது ஏன்..??
தேசிய தகுதி தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வுகளை ரத்து செய்யாமல் Plus Two CBSE தேர்வுகளை மட்டும் ரத்து செய்திருப்பது ஏன்? என மத்திய அரசுக்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க…
Plus Two பொதுத்தேர்வு நடக்குமா..?? முதல்வர் ஆலோசனை..! !
கொரோனா corona 2ம் அலை காரணமாக இந்தியா முழுவதும் CBSE Plus Two பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வலுத்து வரும் நிலையில், தேசிய தகுதி தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாமல் Plus Two தேர்வுகளை மட்டும் ரத்து செய்திருப்பதன் உள்நோக்கம் குறித்து கல்வியாளர்களும், எதிர்கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:
Plus Two பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ள ஒன்றிய அரசு, ஏன் NEET தேர்வை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களின் உடல் நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? என்றும் அவர்கள் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய கல்வி கொள்கை(NEP) அடிப்படையில், கல்லூரிகளில் சேருவதற்கு மேல்நிலை பள்ளி தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள வைகோ, தற்போது மட்டுமட்டுமல்ல எப்போதும் Plus Two பொதுத்தேர்வுகள் நடத்த வேண்டாம் என்பதே ஒன்றிய அரசின் திட்டம் என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
Plus Two பொதுத்தேர்வு- பெற்றோர், மாணவர்கள் கருத்து தெரிவிக்க மின்னஞ்சல் அறிவிப்பு..!!
எனவே ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு அதன்படி தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு ஒருமாத முன் அறிவிப்போடு மேல்நிலை பள்ளி தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்:
Plus Two தேர்வுகள் ரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையையும் விளைவிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். நுழைவுத் தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா corona சூழலை கல்வித்துறை பயன்படுத்திக் கொள்வதாகவும் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.