PLUS TWO: துணை தேர்வு முடிவுகள் 13ம் தேதி வெளியிடப்படும்..!!
‘PLUS TWO துணை தேர்வு முடிவுகள் 13ம் தேதி வெளியிடப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
PLUS TWO துணை தேர்வு முடிவுகள் 13ம் தேதி காலை 11:00 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்.PLUS TWO தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு, தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
அரசுப் பணிகளில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளிக்க சட்டத்திருத்தம்: அமைச்சர்..!!
அவர்களும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 15, 16ம் தேதிகளில் தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகலுக்கு, ஒரு பாடத்துக்கு தலா 275 ரூபாய்; மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.