PLUS TWO: மதிப்பெண்ணில் திருப்தி இல்லையா..?? 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..!!
PLUS TWO மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக PLUS TWO மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் அனைவருக்கும் ALL PASS அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 8,16 , 473 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொரோனா பரவலைப் பொறுத்து தேர்வு நடைபெறும் எனவும் SSLC மதிப்பெண் சான்றிதழும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.