PLUS TWO: தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியீடு- மதிப்பெண் வழங்குவதில் மாற்றம்..??
தமிழகத்தில்PLUS TWO பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண்
- SSLC: பொதுத்தேர்வில் 50%,
- PLUS ONE: தேர்வில் 20 %,
- PLUS TWO:மதிப்பெண் செய்முறை, உள் மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்கான பணிகளில் தேர்வு துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டது. மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. அதன்படி, JULY -19(இன்று) PLUS TWO பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியிட இருப்பதாக அண்மையில் தேர்வுத் துறை அறிவித்தது. இதற்கான இணையதள முகவரிகளைதேர்வு துறை வெளியிட்டது.
வழக்கமாக ஒவ்வொரு தேர்வு முடிவும் முழு மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டுதான் வழக்கம். ஆனால் இந்த முறையை SSLC, PLUS ONE, PLUS TWO மதிப்பெண் கணக்கிடும் போது தசம எண் அடிப்படையில் என்ன மதிப்பெண் வருகிறதோ அதை அப்படியே மாணவர்களுக்கு வழங்க தேர்வுத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு மாணவனின் மதிப்பெண்ணை கணக்கிடும்போது 6 பாடப்பிரிவுகளில் 600 மதிப்பெண்ணுக்கு அந்த மாணவன் பெற்ற மொத்த கூட்டு தொகை மதிப்பெண்ணாக 552.81 என்று வந்தால், அந்த மதிப்பெண்ணை முழுமையாக்காமல் அப்படியே தசம எண் அடிப்படையிலேயே தேர்வு முடிவை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து 8 லட்சத்து 6ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான PLUS TWO பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (JULY -19)) காலை, இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலை ஜூலை 22ஆம் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இணையதள முகவரி : tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in