PGTRB: LATEST STUDY MATERIALS :கல்வியியல் கேள்விகள்: - Tamil Crowd (Health Care)

PGTRB: LATEST STUDY MATERIALS :கல்வியியல் கேள்விகள்:

 PGTRB: LATEST STUDY MATERIALS :கல்வியியல் கேள்விகள்: 

1)கல்வியில் போதிய அளவு தொழில்சார் கூறுகள் இல்லாததால் ஏற்படும் பிரச்சனை?

 வேலையின்மை, தகுதி குறைவான வேலை .

2)பண்டைய இந்திய கல்வி முறையின் தொடக்கம்?

 வேதகால குருகுலக் கல்வி முறை.

3) மாணவர்கள் தாமாகவே  கல்வி மாற்றம் ,ஆர்வம் ஆகியவைகளுக்கு ஏற்ப கற்று முன்னேறுவதற்காக தோன்றிய புதுமை?

 சுயகற்றல் சாதனங்கள்.

4) கற்றல் இன்றி இயல்புகளால் ஏற்படும் தேவைகளை திருப்திப்படுத்தும் தூண்டல்கள் ?

முதன்மை வலுவூட்டி.

5) திட்டமிட்டு கற்றலில் ஒவ்வொரு சிறு பாட கருத்தும்—— எனப்படுகிறது?

சட்டகம். 

6) மனிதர்களிடம் இயல்பாக உள்ள அடிப்படை போக்கு?

 இணங்குதல் .

7)நம் நாட்டு மைய அரசு ‘கல்வி ஓர் அறைகூவல்’ என்ற ஆவணத்தை வெளியிட்டு ஆண்டு?

 1985.

8)’ பன் மரபு நிலையம்’ எங்கு அமைந்துள்ளது?

 சான்பிரான்சிஸ்கோ. 

9)நிறுவன தன் ஆட்சியின் விளைவாக மேலைநாடுகளில் மலர்ந்துள்ள புதுமை?

 திறந்த முறை கல்வி.

10) பள்ளிகள் இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி குழு?

 கோத்தாரி கல்வி குழு.

11) கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல் எனப்படுவது?

 பரிசோதனை.

12) ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனை சுற்றி இருக்கும் பல்வேறு விதமான தூண்டல் களின் தொகுப்பு ?

மரபு வழிக் காரணிகள்.

13) ஓர் உயிரியின் உருப்பெருக்கம் அல்லது அளவு அதிகரித்தல்—–என்கிறோம்?

 வளர்ச்சி.

14)  நடப்பில் உள்ள பல்வேறு சூழல்களில் குறிப்பிட்ட சமயத்தில் நம் தேவையை உடன் இணைந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து புலன்காட்சி செயலுக்கு ஆட்படுத்துவது என்ன?

 கவனம்.

15) கவன வீச்சின் வேறு பெயர் ?

புலன்காட்சி வீச்சு.

16) அக காரணிகளால் தோற்றுவிக்கப்படும் கவனம்?

 இச்சைக் உட்பட்ட அல்லது முயற்சி சார் கவனம்.

17) புலன் உணர்விற்கு நாம் ஏற்கனவே பெற்றுள்ள அனுபவங்களின் அடிப்படையில் பொருள் ஊட்டி தூண்டல் பொருளின் தன்மையை அறிதல்?

 புலன்காட்சி.

18) இல்லாத ஒன்றை இருப்பதாக காணுதல் அதாவது, எவ்விதமான தோன்றலும் இல்லாமல் தூண்டல் இருப்பது போன்று உணர்தல் எவ்வகை காட்சி ?

இல்பொருள் காட்சி.

19) வயது வந்தவர்கள் பெரும்பாலும்—–பெரிதும் பயன்படுத்துவர்.

 சொல் சாயல்களை.

20)  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்புகளைக் கொண்டவை ?

சிக்கலான பொதுமைக் கருத்து.

21)’ சிந்தித்தல் ‘என்பது நமது உடலில் உள்ள உறுப்புகளின் அசைவு என்று கூறியவர்?

 வாட்சன் .

22) செயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை?

 கற்பனை.

23)  விலங்குகள் பெரும்பாலும் கற்பது எம்முறை?

 முயன்று தவறிக் கற்றல் .

24)  ஒருவர் செய்த செயலின் விளைவை அவருக்கு உடனடியாக தெரியப்படுத்துதல்?

 பின்னூட்டம்.

25) பொதுமை கருத்துக்கள் வாயிலாக சிந்தித்தல் ?

உயர்நிலை கற்றல்.

26)  கற்றலை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றல்?

 நினைவு.

27) ஒரு முறை பார்த்த பின் பார்த்த பொருட்களில் எத்தனை பொருட்களை  நினைவுபடுத்தி கூற முடியுமோ அப்பொருட்களின் எண்ணிக்கை அவரது—–ஆகும்

 நினைவு வீச்சு.

28)  புதிதாக கற்பவர்கள் கடினமாக உள்ள போது ஏற்கனவே கற்றவைகளால் அவை மறக்கக் கூடிய வாய்ப்பு அதிகம் என்று ——–குறிப்பிடுகிறார்.

ஆசுபெல்.

29)  கற்றல் உட்பட எல்லா நடத்தைக்கும் ஆதாரமாக இருப்பது?

 ஊக்கம்.

30) மனித நடத்தைக்கு காரணிகளாக அமையும் மிக வலுவான ஊக்கிகள்?

 உடல் தேவைகளுடன் இணைந்தவை .

31)போட்டி மனப்பான்மை பரவிக் காணப்படும் சமுதாய பாதிப்பில் இன்று அடைவு எழுகின்றது எனக்கூறியவர்?

 அட்கின்சன்.

32) புரிந்துகொள்ளல் ,புதுமை புனைதல், தொடங்கிய செயலை தொடர்ந்து தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளை தானே உணர்தல், போன்ற கூறுகள் அடங்கியதே நுண்ணறிவு என்றவர்?

 ஆல்பிரட் பினே.

33) ——- ஒருவனுடைய நுண்ணறிவு ஈவு கொண்டு அவனுடைய நுண்ணறிவை அளவிட முடியும் என்று கூறினார்.

ஆல்பிரட் பீனே .

34)உடல் வலுவும் ,நுண்ணறிவுத் திறனும் நேரடி தொடர்பு கொண்டவை எனக் கருதிய இங்கிலாந்து அறிஞர்?

 பிரான்சிஸ் கால்டன்.

35) குறிப்பிட்ட துறையில் ஆர்வமும், திறமையும் மிகுந்து இருத்தல்——–எனப்படும்.

 நாட்டம் .

36)  ஒரு குறிப்பிட்ட துறையில் உரிய பயிற்சி பெற்ற பின்னர் ஒருவர் எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்பதை காட்டும் சோதனை?

 அடைவுச் சோதனை.

37)’ விலங்கியல் மனம்’ என்றழைக்கப்படும் மனம்?

 இட்.

 38)ஒவ்வொருவனும் தனது உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் முழுமையாகவும், நிபந்தனைகள் இன்றியும் ஏற்றுக் கொண்டால்தான் இசைவு  உள்ள ஆளுமையை பெற இயலும் என்றவர்?

 கார்ல் ரோஜர்ஸ்.

39)’ வீரவணக்க மனப்பான்மை’ எவ்வகை தற்காப்பு நடத்தை முறை?

 ஒன்றுதல்.

40) குழு ஊக்கத்தின் முயற்சி சார் கூறு?

 பின்பற்றுதல்.

41) பள்ளியில் சேரும் குழந்தை படிப்பில் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டு மேல் வகுப்புக்கு செல்லாமல் அதே வகுப்பிலேயே தங்கியிருத்தல்?

 தேக்கம்.

42) ‘மதச்சார்பின்மை என்பது மதம் இல்லை என்பதன்று நாம் எல்லா மதங்களையும் மதிக்கின்றோம்’ என்பதே இதன் பொருள் என்றவர்?

 ராதாகிருஷ்ணன்.

43) பெண்கல்வி ஒரு தேசிய பிரச்சினையாக உணரப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டது கல்விக்குழு?

 தேசிய கல்வி குழு

44) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது எந்த திறந்தவெளி பல்கலைக்கழகம்?

 இங்கிலாந்து.

45) பேசும் படங்கள் தோன்றிய ஆண்டு?

 1935 .

46)’கணிப்பொறியின் தந்தை’ என்று அழைக்கப்படும் சார்லஸ் பாப்பேஜ் எந்த நாட்டினர்?

 இங்கிலாந்து.

47) கட்டாய தமிழ்வழிக் கல்வி திட்டத்தை பரிந்துரை செய்த குழு?

 மோகன் குழு.

48) நுண்ணறிவுச் சோதனையின் தந்தை?

 ஆல்பிரட் பீனே.

49) புது தில்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேசிய அறிவியல் திட்டம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

 1963.

50) அதிக ஏற்புடைமை தன்மையும், அதிக நம்பகத்தன்மை கொண்ட தேர்வு எது?

 புறவய தேர்வு .

51)குழந்தையிடம், மனிதனிடமும் அவர்களது உடல், உள்ளம், ஆன்மீகம் ஆகியவற்றின் சிறப்பு மிக்க பண்புகளை வெளிக்கொணர்தல்?

 கல்வி .

52)  சென்னை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

 1857.

53)’ அற்புதம்’ என்ற சொல் எதனைக் குறிக்கும்?

 10 கோடி.

54) இந்திய அரசியலமைப்பின் கல்வியை கட்டாயமாக இலவசமாக அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது?

 தொடக்கக்கல்வி.

55) இந்தியாவில் முதல் ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்ட இடம்?

 சென்னை.

56)’ எமிலி’ என்ற நூலில் குழந்தை கல்வியைப் பற்றிய விளக்கிய அறிஞர்?

ரூஸோ.

57) பெண்கள் கல்விக்கான தேசிய கவுன்சில் இன் 1963 தலைவராக இருந்தவர் ?

பக்தவச்சலம்.

58) முதியோர் கல்வி எனும் கருத்தினை முதலில் அறிமுகப்படுத்திய நாடு?

 ரஷ்யா.

59) தமிழ்நாட்டில் ஊனமுற்றோருக்கான ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ள இடம்?

 கோவை .

60)தேசிய மக்கள் கல்வி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?

1980.

61)’ உளவியல்’ என்பதன் பொருள் ?

ஆன்மா பற்றி ஆராய்வது.

62) ஆதார கல்வியின் சிறப்பு?

 செய்து கற்றல் .

63)’ஆர்யா’ என்னும் பத்திரிகை ஆசிரியர்?

 அரவிந்தர்.

64) பியாஜேயின் கல்விக் கொள்கையை பற்றிய அறிவு குழந்தைகளின் எதைப் பற்றி அறிய உதவுகிறது?

 மனப்பான்மை.

65) தார்ண்டைக்கின் கற்றல் பற்றிய கருத்து?

 முயன்று வருவது.

Leave a Comment