PGTRB-போட்டித் தேர்வு: கல்வியியல் கற்பித்தல் .
1)1986 இல் இந்திய தேசிய கல்வி கொள்கை பரிந்துரைப்படி நவோதயா பள்ளிகள் என்ற முன்னோடி பள்ளிகள் துவங்கப்பட்டது.
2) சில முன்னோடி பள்ளிகள்:
- சமுதாய பள்ளிகள்
- பிரான்சிஸ் பார்க்கில் பள்ளிகள்
- டூயி சோதனை பள்ளி
3)அமெரிக்காவில் சுதந்திர பள்ளி இயக்கம் 1967ல் துவங்கப்பட்டது
4)சமுதாய பள்ளிகள்:
- அமெரிக்காவில் சமுதாய பள்ளிகள் சுதந்திர இயக்கத்தின் பின்னணியில் தோன்றின.
- மாணவரின் கல்வியும், சமுதாயத்தின் செயல்களும் ஒருசேர நடக்கும் இடம் சமுதாய பள்ளிகள்.
- சமுதாயத்தின் தேவைகள், மேம்பாடு இவற்றை ஒட்டியே கலைதிட்டம் அமைக்கப்படும்.
- சமுதாய பள்ளிகள் தொழிற்கல்வியை வற்புறுத்தின.
- ” பள்ளிகள் சமுதாயத்தை விட்டு ஒதுங்கிய தீவுகள் அல்ல சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு “.
- அமெரிக்காவில் சமுதாய பள்ளிகள் சான்றிதழ்கள் வழங்குகின்றன.
- கனடாவிலும் சமுதாய பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால், சான்றிதழ்கள் வழங்குவது இல்லை.
- சமுதாய பள்ளிகளால் மாணவர்களிடம் சமூக அக்கறையும் சமுதாய உணர்வும் மேலோங்குகிறது.
- சுயவேலைவாய்ப்பு பெருகுகிறது.
5)பிரான்சிஸ் பார்க்கர் பள்ளி :
முற்போக்கு கல்வியின் தந்தை பிரான்சிஸ் பார்க்கர்( 1837- 1902).
ரூசோவின் போன்றே பிரான்சிஸ் பார்க்கர் குழந்தைகள் ஒரு தெய்வீகப் பிறவி என்றார் .
முற்போக்கு கல்வியில் பாடத்திட்டத்தில்
- உற்றுநோக்கல்
- சோதனை சாலையில் ஆய்வு
- கருத்துக்களை பரிட்சித்து பார்த்தல்
முறைகள் பயன்படுத்தப்பட்டன.
முற்போக்கு கல்விமுறையில்.
- விதி வரும் முறையில்(Inductive ) -கணிதப் பாடமும்,
- நேரினை கலை பயணங்கள் முறையில்- அறிவியல் மற்றும் வரலாறு பாடங்கள் நடத்தப்பட்டன
இம்முறையை குவின்ஸி முறை என்றும் அழைக்கப்பட்டது.
6) டூயி சோதனை பள்ளி:
- 1896 இல் சிகாகோவில் துவங்கப்பட்ட ஒரு பள்ளியே டூயி சோதனை பள்ளியாகும் .
- சமூகக் கூட்டு வாழ்க்கைக்கான ஒரு பயிற்சி தளமாகவும், தனிமனித ஆற்றல்களையும், சமூக அக்கறையையும் ஒருசேர கவனிக்கும் வகையில் அமைந்தது சோதனை பள்ளி.
- டூயி சோதனை பள்ளியில் செயல்திட்ட முறை(Project method) மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.
- குழந்தைகள் சமூக சூழலில் நேரடி அனுபவங்கள் மூலம் கற்றல் முக்கிய நோக்கமாக இருந்தது.
7) கோத்தாரி கல்விக்குழு 1964- 66 :
*அண்மை பள்ளி கருத்தினை வெளியிட்டது.
*நம் நாட்டில் தொடக்கப் பள்ளிகளில் “சமூக ஒழுக்கம்” நிகழ்கிறது.
*நாட்டு வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி, தேச ஒற்றுமை ஆகியவற்றை கல்வி வளர்க்க அன்மை பள்ளிகள் வளர வேண்டும்.
இணைப்பு பள்ளிகள்:
*”உயர்நிலைப் பள்ளியை கேந்திரமாகவும் அதனை சுற்றி அமைந்துள்ள ஆரம்ப பள்ளிகளை இணைத்தல்” -பள்ளிகளுக்கான இணைப்பு திட்டம் .
கல்லூரி இணைப்பு திட்டம்:
* ஒவ்வொரு கல்லூரியின் சில மேல்நிலைப் பள்ளிகளை இணைத்தல்.
* கோத்தாரிக் கல்விக் கமிஷன் 1966இல் பள்ளி இணைப்பு திட்டத்தை பரிந்துரைக்கப்பட்டது.
* 1978 ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு கல்லூரி இணைப்பு திட்டத்தை துவங்கும் மாறு ஆலோசனை வழங்கியது.
கல்விக் கமிஷன் கருத்துப்படி,
*கிராமப்புறங்களில் சுமார் பத்து மைல் சுற்றளவில் ஒரு உயர்நிலைப்பள்ளி யோடு ஐந்து உயர் தொடக்கப் பள்ளிகளும் 28 தொடக்கப் பள்ளிகளும் இணைக்கப்படலாம்.
* முறைசாரா கல்வி மையங்களும் இடையே உள்ள தூரம் நடந்து கடக்கும் அளவிலும் 5 முதல் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் .
*ஆசிரியர்களுக்கு – கல்வி தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றில் இணைப்பு மையம். பொதுவான பகுத்தறிவு பயிற்சி அளிப்பது.
8)DIET: (மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி கேந்திரங்கள்):
-பாட ஆசிரியர்களுக்கு முறையாக பணியிடை பயிற்சியும்,
-பணிக்கு முந்தைய பயிற்சியும் மட்டுமே வழங்கும்.
– தலைமை ஆசிரியர்களுக்கும், மாநில கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுகளை நடத்துதல்.
– நடத்தை நெறிமுறைகளை உருவாக்குதல் போன்றவை
-இதன் பணிகளாகும் .பள்ளி இணைப்பு மையத்திற்கு மாற்றாக 1986இல் அறிவிக்கப்பட்டு டயட்(DIET) மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி கேந்திரங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.
9) தொலைதூரக் கல்வி:
^ கற்பித்தல் செயலுக்கும், கற்றல் செயலுக்கும் இடையே காலத்தாலும், அன்றி தூரம் இடைவெளி ஏற்படும் வகையில் அமைக்கப்படும் கற்பித்தல் கற்றல் செய்யும் முறைகளே தொலைதூர கல்வியாகும்.
^ தொலைதூரக் கல்வியின் மாதிரியை விளக்கியவர் டேவிட் சீவார்ட் .
தொலைதூர கல்வியில் முதன்மையாக விளங்குவது
i)அஞ்சல் வழி பாடங்கள்
ii)வானொலி, தொலைக்காட்சி
^சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் வானொலிகள் பள்ளிகள் காணப்படுகின்றன.
^ தொலைதூர கல்வியில் ஒரு மாணவரும் பற்பல செயல்களை செய்தூம் பலவித கற்றல் புத்தகங்களில் இருந்தும் தானே கற்கும் முறை வலியுறுத்தப்படுகிறது.
^அஞ்சல் வழி முறையில் நடைபெறும் கற்பித்தலும், கற்றலும் தொலைதூரக் கல்வியின் ஒரு பகுதியாகும்.
10)திறந்தவெளி பல்கலைக்கழகம்:
கல்வியில் திறந்தவெளி பல்கலைக்கழகம் வழி கற்பிப்பதும் ஒரு முறையாகும்.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் தத்துவம்:
- ” வாழ்நாள் முழுவதும் கல்வி கற்போரின் வகுப்புக்கும் திறமைக்கும் தேவைக்கும் உகந்த கல்வி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் திறந்த தன்மை பெரிதும் போற்றப்படுகிறது”.
- மதுரை காமராசர் பல்கலைக்கழக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கு 25 விரும்பியிருந்தால் நேரடியாக எம்.ஏ வகுப்பில் சேரலாம்.
- திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முற்றிலும் தேவைகளை ஊற்றிய புதுமை பாடதிட்டம் பின்பற்றப்படுகிறது.
- இந்தியாவில் முதன்முதலில் துறை கல்விக்காக 1902ல் தில்லி பல்கலைக்கழகம் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தை தொடங்கியது.
- இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் ,சென்னை, மதுரை, காமராசர், அண்ணாமலை, பாரதியார், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் முதலியன.
- திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் ஆகும் .
- தகவல் அளிப்பு ஒருவர் தன்னிடம் இருக்கும் செய்தியையும், அறிவையும் ,திறனையும் இன்னொருவருக்கு அளிப்பது.
- தகவல் அளிப்பினை பெரும் ஒருவரின் நடத்தையில் மாறுதல் ஏற்படுகிறது.
- சிறந்த தகவல் அளிப்பு என்பது இருவழி செயல் ஆகும்.
- இதில் பின்னூட்டமும், கருத்து பரிமாறுதல் முக்கிய பங்கு வகிக்கும்.
*திரளான மக்கள் பல்வேறு பகுதிகளில் வசித்தாலும், ஒரு நிகழ்ச்சியில் உடலாலும், சிந்தனையாலும் பங்குபெறும் மக்கள் குழுவே திரளான மக்கள் கூட்டம்.
* பொது தகவல் பரப்பிற்கு பயன்படுத்தப்படும் மக்கள் தொடர்பு சாதனங்களில் முக்கியமானவை :
- செய்தித்தாள்கள்
- வானொலி, தொலைக்காட்சி.
* செய்தி பரப்பு சாதனங்கள் திறந்த தன்மை உடையவை
* செய்தித்தாள்களை அச்சிட்டு வெளியிடுவதில் இந்தியா உலகிலேயே இரண்டாவது இடம் வகிக்கின்றது.
* வானொலியும், தொலைக்காட்சியும் மிகவும் உகந்த பொது தகவல் பரப்பு சாதனங்கள் ஆகும்.
* எழுத்தறிவில்லாத மக்களிடையே பயணிக்கும் சாதனங்கள் இவையே.
* முறைசாரா கல்வியில் நம் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பவை.
* வானொலியும், தொலைக்காட்சியும் ஒருவழி தொடர்பானவை.
*ஒளியையும், ஒலியையும் ஒரு சேர வழங்குவதால் தொலைக்காட்சிகாட்டிலும் ஒருபடி மேலானது.
* புற உலக நிகழ்ச்சிகளை தத்ரூபமாக வகுப்பறைக்குள் கொண்டு வரக்கூடியது.
*தொலைக்காட்சியே கற்பித்தல் திறன்கள், விற்பனை, சாதுரியம், பிரச்சினை தீர்த்தல் ஆகியவற்றை வளர்ப்பது தொலைக்காட்சி பெரிதும் உதவுகின்றது.
*பல ஊடக கற்றல் வகுப்புகள் பிரபலமடைந்து வருகின்றன.
12)”கோத்தாரி கல்விக்குழு (1964- 66):
” திறமையாக இயங்கி வரும் புகழ்பெற்ற சில கல்லூரிகளுக்கும் சில பல்கலைக்கழக துறைகளுக்கும் ஆவது தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோத்தாரி கல்விக்குழு (1964 -66) வெளியிட்டது.
13)மேலைநாடுகளில் திறந்த முறை கல்வி என்னும் புதுமை மலர்ந்துள்ளது.
14) தன்னாட்சியில் கல்வி சுதந்திரம் பெறுகிறது:
- எந்தவிதத் தடையுமின்றி உண்மை அறிவை தேடும் உரிமை கல்வி சுதந்திரம் ஆகும் .
- ஆசிரியரின் சுதந்திரத்தை குறிப்பது தனிநபர் தன்னாட்சி முறையாகும்.
- மாணவர்கள் தாமாக கற்றுக் கொள்வதற்கு ஆசிரியர் வழங்கும் சுதந்திரத்தையும், கற்று சூழல்களில் அளிக்கப்படும் சுதந்திரத்தையும், குறிப்பது வகுப்பறை தன்னாட்சி முறையாகும்.
15) கற்கும் முறையில் சுதந்திரம் :
i)திட்டமிட்டு கற்றலும்,
ii)கணினி துணை கொண்டு கற்றலும்
16) முழுமை தேர்ச்சி நிலை அடைய உதவும் கற்றல் ஆகும்:
i)கண்டறியும் முறை
ii)தொலைக்காட்சி வழிக்கற்றல்
17)திட்டமிட்டு கற்றல்(Programmed Instruction):
- 1950ஆம் ஆண்டு திட்டமிட்டு கற்றல் என்ற தனிநபர் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- தூண்டல், துலங்கல் -வலுவூட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி, ஒரு பாடம் முழுவதையும் மாணவர் தாமாகவே கற்க திட்டமிடுதலில் திட்டமிட்டு கற்பித்தல்.
- திட்டமிட்டு கற்றல் வாயிலாக பயிலும் மாணவர் பாட கருத்தில் 90% முழு திறனறிவு பெற இயலும்.
18)Types of programmes:
- திட்டமிட்டு கற்பித்தல் உத்தியை முதலில் தந்தவர் -சிட்னி பிரேஜி.
- இவரே 1930 கற்பித்தல் இயந்திரத்தை உருவாக்கினார்.
- 1950-களில் திட்டமிட்ட கற்பித்தலில் மேலும் ஆர்வத்தை தூண்டிய ஸ்கின்னர்.
- நேர்கோட்டு வகை திட்டமிட்ட கற்பித்தலை உருவாக்கியவர் ஸ்கின்னர்.
- கிளை வழி திட்டமிட்டு கற்பித்தல் முறையை உருவாக்கியவர் கிரவுடர்.(Crowder).
19)முழுமை தேர்ச்சி நிலை கற்றல்:
* “ஒவ்வொரு மாணவனின் இயல்புக்கு ஏற்றவாறு பொருத்தமான தரமான கற்பித்தல் நிகழ்ந்தும், தேர்ச்சி பெறுவதற்கு போதுமான ‘பயிற்சி’ கால அவகாசம் அளிக்க, எந்த மாணவனும் எந்த பொருளிலும் நடத்தையிலும் முழுத் தேர்ச்சி பெற்றுவிட முடியும்”- சீ. மாரீசன்.
* சீ. மாரீசன்.(1920-1960)என்பவர் முழுமை தேர்ச்சி நிலை தோற்றுவித்தார் .
*இவரை தொடர்ந்து J.B. கேரல், பெஞ்சமின் ப்ளூம், போன்றோர் முழுமை தேர்ச்சி முறையில் மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
20)கேரலின் கற்றல் படி:
- நாட்டம்
- விடாமுயற்சி
- கற்பித்ததை புரிந்துகொள்ளும் ஆற்றல்
- கற்பதற்கான வாய்ப்பு
- போதனையின் தரம்
போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
21) கெல்லர் திட்டம் :
- முழு தேர்ச்சி கற்றலுக்கு வகை செய்கிறது.
- பிரட் கெல்லர் என்னும் அமெரிக்க உளவியலாளர் 1968-ல் கல்லூரி அளவில் கற்பித்தலுக்கான சுய கற்றல் முறையை உருவாக்கியவர்.
- இது தனிநபர் தாமே கற்பிக்கும் முறைகளில்(Personalised system of Instruction) ஒரு வகைப்படும்.
- மாணவர்கள் தத்தம் சுய வேகத்தில் பாடப் பகுதிகளை கற்று தேர்ச்சி அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
- ஆசிரியர்களுக்கு உதவியாக மூத்த மாணவர்கள் (Giftyed Student in Class)தங்கள் சக மாணவர்களின் சந்தேகத்தை போக்கவும், விளக்கங்கள் அளிக்கவும், அவ்வப்போது பகுதிக்கான மதிப்பீட்டு முறையை வினாடி-வினா மூலம் செயற்படுத்தும், மாணவர்கள், அருகிலேயே இருந்து செயலாற்றுவது தான்.
இம்முறையும் சிறப்பம்சமாகும்:
இதில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளன.
1968ல் வெளியிடப்பட்ட
“ஆசிரியருக்கு விடை கொடுப்போம்”ஆய்வுக்கட்டுரையில் PSI- யின் முக்கிய அம்சங்கள் :
- முழு திறன் அடைவு(80-90%)
- சுய வேகம்
- துணை கற்றல் வசதிகள்
- அச்சிடப்பட்ட வழிகாட்டி கையேடுகள்
- கற்பித்தலில் மூத்த மாணவர்களை பயன்படுத்துதல்.
22)கண்டறியும் முறை:
புரூனர் -கண்டறிந்து கற்றல் முறையை அறிமுகப்படுத்தினார்.
I)முற்றிலும் வடிவமைக்கப்பட்ட முறை:
- இம்முறையில் மாணவர்களிடம் துருவி ஆராயும் பண்பு வளர்கிறது.
- மிகுந்த கால அவகாசம் தேவை .
II)முற்றிலும் வடிவமைக்கபடாத முறை :
- இதில் ஆசிரியர் பங்கு மிகக் குறைவு.
- மீத்திறன் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடியது.
III)வழிகாட்டுதலோடு அமைந்த கண்டறியும் முறை:
- இம்முறையில் சில வழிமுறைகளையும், கேள்விகளையும் ஒட்டி கற்கும் சூழலை மாணவர்களுக்கு ஆசிரியர் அமைத்துத் தருவார்.
23) நூலகம் சார்ந்த கற்றல் :
-“கல்வி நிறுவனங்களின் நூலகங்களை பெருமளவு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை மாற்றி அமைக்கப்பட்டு நூலகங்கள் கற்றல்வளமை மையமாக திகழ செய்வதே” முறையாகும்.
- சுய கற்றல்
- சுயமுயற்சி
- நூலகத் திறன்(Library skill)
போன்றவை.
– நூலகம் சார்ந்த கற்றலில் மாணவர்கள் கற்கும் நடத்தையை பெறுகின்றனர்.
24) நடமாடும் பள்ளிகள் -மொபைல் ஸ்கூல்(Mobile School):
- நடமாடும் பள்ளிகளை மெக்டொனால்ட் என்பவர் அறிமுகப்படுத்தினார்.
- நடமாடும் பள்ளிகள் அல்லது சுவரில்லா பள்ளிகள் என்பது இதன் வேறு பெயர்.
- நான்கு சுவர்களுக்குள்- அறையையும், ஒரு குறிப்பிட்ட வளாகத்தினுள்- சிலையையும் தகர்த்து சமுதாயத்தையே பள்ளியின் நிலை களமாகக் கொண்டு இயங்குபவை.
- சமூக சூழலில் பெறப்படும் பட்டறிவு இப்பள்ளியின் கலைதிட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் கல்வி இத்தகைய நடமாடும் பள்ளிகளில் பெற்றோருக்கும், கற்பித்தல் பொறுப்புகளை வழங்கலாம்.
- வீடு தவிர சமுதாயம் கல்வி வழங்கும் முறையில் கருதப்படுகின்றது.
- சமூகத்தில் உள்ள மூத்த குடிமக்கலிருந்து சில சான்றோர்களையும், வல்லுனர்களையும் ,அறிவுரை – சமூக சூழலில் மாணவர்களுக்கு பயனுள்ள கட்டளை வழங்க செய்யலாம் .
25)மிதக்கும் பல்கலைக்கழகம்:
- உயர்கல்வி நிலையில் பயன்படுத்தப்படுவது.
- உலகின் முதல் மிதக்கும் பல்கலைக்கழகம் ‘கப்பல் தல பல்கலைக்கழகம்,(Shipboard University).
- எஸ் எஸ் யுனிவர்சிட்டி(S.S.University) கப்பலில் அமெரிக்க நாட்டின் பல்வேறு கல்லூரியிலிருந்து மாணவர்கள் மிதக்கும் பல்கலைக்கழகம் மூலம் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர்.
26) மாற்று வழி பள்ளிகள்:(Alternative School):
டால்டன் திட்டம் :
^அமெரிக்காவில் உள்ள டால்டன் என்ற இடத்தில் 1920இல் ஹெலன் என்ற அம்மையார் மாண்டிசோரி முறையின் அடிப்படையில் மாணவர்கள் அவரவர்கள் திறனுக்கு ஏற்ப சுய வேகத்தில் முன்னேறும் வகையில் கல்வி நிறுவனம் முறையை ஏற்படுத்தினார்.
^வகுப்பறைக்கு பதிலாக பாடப்பிரிவு ஆராய்ச்சி கூடங்கள் நிறுவப்படுகின்றன.
^ ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒப்பந்தங்கள் என்றழைக்கப்படும்‘ ஒப்படைப்புகள்’ .பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.
27)தனிநபர் கற்பித்தலை உருவாக்கியவர் டாக்டர் பர்க்