PGTRB: கற்றல் -(LEARNING). - Tamil Crowd (Health Care)

PGTRB: கற்றல் -(LEARNING).

   PGTRB: கற்றல் -(LEARNING)

*மனித நடத்தைக்கு அடிப்படை கற்றல் .

*கற்றல் என்பது இயற்கையாக நிகழும் ஒரு வகையான வளர்ச்சியே.

 *குழந்தைகள், வகுப்பறையில் நடைபெறும் செயல்பாடுகள்- ஆசிரியரின் போக்கு ,ஆகியவற்றோடு ஒத்துப்போகும்- கற்றலின் முதற்படி .

*கற்றல் என்பது பெறப்படும் அனுபவங்களைப் பகிர்ந்து, அவைகளை சீராக ஒழுங்கு படுத்தும் செயல் .

*கற்ற ஒரு மனிதன் பெற்றுள்ள முதிர்ச்சி நிலை ,மனத்திறன், ஈடுபாடு, குறிக்கோள் ஆகியவற்றைப் பொறுத்தும் அவன் கற்கும் போது கிடைக்கக்கூடிய ஊக்குவித்தல், பயிற்சி, வெகுமதி போன்றவற்றை பொருத்தும் மேம்படும்.

 *கற்றல் குறிக்கோள் அடிப்படையில் நடைபெறும் செயல் ஆகும்.
நுண்ணறிவு, செயல், கற்றல் என்பது ஒரு தனி மனிதன் தன்னைத் தானே முழுவேகத்துடன் ஈடுபடுத்திக் கொள்ளும் செயல்.

* கற்றல் என்பது ஒரு தனிமனிதனின் ஈடுபாடும் மட்டுமல்லாது ,சமூகத்தின் முயற்சியும் அடங்கும்.

* உடல் வளர்ச்சியில் முதிர்ச்சி பெற்ற பின்தான் குழந்தைகள் கல்வி கற்க இயலும் .

*முதிர்ச்சி அடைந்த பிறகு கொடுக்கப்படும் பயிற்சிகளை விரைவாக நடைபெறுகிறது.

* ஆரம்ப நிலையில் பயிற்சியானது கற்றலில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கவல்லது.

* மனத்திறன் அடிப்படையில் குழந்தைகளை,      

  1.  விரைவாக கற்போர்
  2. மெதுவாக கற்போர் 
  3. கற்றல் குறைபாடு உடையோர்

என பிரிக்கலாம்.

* ஊக்குவித்தல் எனப்படுவது ஒரு தேவையை நிறைவு செய்ய நம்மைத் தூண்டும் நம்மில் இருந்து இயங்கும் உந்துதல் ஆகும்.

* தேவை ,விருப்பம், ஆர்வம் ஆகியவை ஊக்கத்தின் காரணிகளாகும்.
 பாராட்டு, வெகுமதி என்பது ஏற்கனவே உள்ள தூண்டலை அதிகரிக்க பயன்படுகிறது.

* நடனம், வரைதல், விளையாட்டு போன்றவற்றில் கற்று மேம்பட பயிற்சி முக்கியமாகும்.

 *இலக்குகளை நோக்கி செயல்படும் ஒரு உயிரியின் மனநிலை, ஆற்றல் நிறைந்ததாக இருக்கும்.

 *செயல்பாட்டிலும் கூடிய தானே கற்றல் முறையே சிறந்தது.

*தையல் ,வேலை, கத்திரிக் கோல் கொண்டு வெட்டுதல், போன்றவை உடலியக்க வளர்ச்சி ஆகும்.

* கற்றல் ஒரு அறிவு சார்ந்த செயல்.

மரியா மாண்டிசோரி அம்மையார்:

  • அனுபவம் சார்ந்த தானே கற்றல் முறையை அறிமுகப்படுத்தியவர் மரியா மாண்டிசோரி அம்மையார்.

பியாஜே:

  •  கற்றல் ஒரு அறிவு சார்ந்த செயல் பியாஜே.

Leave a Comment