இந்திய தத்துவஞானிகள்
(INDIAN PHILOSOPHER)
இந்திய தத்துவ ஞானிகள் காந்தி ,தாகூர் ,அரவிந்தர், ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்றோர்.
காந்தி
- தேசத்தந்தை
- லட்சியவாதி
- இயற்கையை நேசிப்பவர்
- அன்பு, அகிம்சை மீது நம்பிக்கை கொண்டவர்.
- அரசியல்வாதி
- தத்துவ ஞானி,
- சமூக சீர்திருத்தவாதி,
முக்கியத்துவம்:
- நூல் நூற்று, நெசவு செய்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்.
- 8 ஆண்டுகளுக்குப் பிறகு கைத்தொழில் ஒன்றை வருமானம் ஈட்டும் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொள்ள வேண்டும்.
காந்தியின் கல்வி முறைகள்:
- கல்வியின் குறிக்கோள்: கருத்தியல் கொள்கை(Idealism)
- கற்பிக்கும் பாடப்பொருள்: எதார்த்தவாதம்(Realism)
- கற்பிக்கும் முறை: பயண அளவு கொள்கை.(Pragmatism)
வார்தா என்ற இடத்தில் சபர்மதி ஆசிரமம் பள்ளி தொடங்கப்பட்டது. கல்வி முறை ஆதார கல்வி முறை .ஆதாரக் கல்வி முறைக்கு மற்றுமொரு பெயர் வார்தா திட்டம். இந்த திட்டமானது 1937 இல் 9 மாநிலங்களில் தொடங்கப்பட்டு 1950ஆம் ஆண்டு வரை இப்பள்ளிகள் நடைபெற்று வந்தது.
காந்தியின் பொன்மொழிகள் :
“மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”
” கடவுள் உண்மை வடிவானவர்”
” உண்மையே கடவுள் “
“குற்றங்களை வெறுக்க வேண்டுமே ஒழிய குற்றம் புரிந்தவர்களை அல்ல”
“மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு உதவுவது கல்வி“
தனிமனித வளர்ச்சி- சமூக இசை விற்கும் இடையே,
ஆன்மீக முன்னேற்றம் -பொருள் சார்ந்த மேம்பாட்டுக்கும் இடையே,
உடல் வளர்ச்சிக்கும் -அறிவு மேம்பாட்டுக்கும் இடையே ஒருவித சமநிலையை ஏற்படுத்துவது ஆகும்.
பாடத்திட்டம் :
தாய்மொழி வழிக்கல்வி
ஏற்புடைய கைத்தொழில் பயிற்சி
காந்தியின் கல்வி சித்தாந்தங்கள்:
- செயல்வழி கற்றல்(Learning by doing)
- கற்கும்போது பொருளீட்டுதல்(Earning while learning)
- ஒருங்கிணைத்தல் கற்பித்தல் மூலம் எல்லா பாடங்களையும் கற்க செய்வது
- செய்து கற்றலுக்கு வழிவகை செய்கிறது.
- 6 முதல் 14 வயது உடைய அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்வி.
- அரசு பள்ளி கல்விக்கு பொறுப்பேற்று நிதி வசதி அளிக்க வேண்டும் .
- சர்வசமய போதனையையும், நன்னடத்தை பயிற்சியையும் வழங்கல்
- சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் முக்கியம்
- மாணவர்கள்- ஆசிரியர்களை,பெற்றோர்களை போல நேசித்து பணிவுடன் நடத்தல்
- தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் வழிக்கல்வி(Craft centred education)
- அனைத்து பாடங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் உடன் இணைத்தல்
- உற்பத்தியுடன் இணைந்த கல்வி
- செயல்முறை ஆதாரக் கல்வியில்( ஆங்கிலத்திற்கும் விளையாட்டுக்கும் )இடமில்லை
இன்றைய கல்வியில் ஆதார கல்வியின் தாக்கங்கள்:
கோத்தாரி கல்வி குழு:
வேலை அனுபவம்(Work experience) -கோத்தாரி கல்வி குழு,
மேல்நிலைப் பள்ளி கல்வி நிலையில் பொதுக்கல்வி பிரிவோடு தொழிற்கல்வி பிரிவை ஏற்படுத்துதல்.
ஈஸ்வர் பாய் படேல் குழு:
சமுதாய பயனுள்ள ஆக்கச் செயல்கள்(SUPW).
தேசிய கல்வி கொள்கை :
இடைநிலை கல்வியை தொழில் படுத்துதல்