PF Insurance: பணியாளர் இறந்தால் Rs.7 lakhs வரை இழப்பீடு; எப்படிப் பெறுவது? - Tamil Crowd (Health Care)

PF Insurance: பணியாளர் இறந்தால் Rs.7 lakhs வரை இழப்பீடு; எப்படிப் பெறுவது?

 PF Insurance: பணியாளர் இறந்தால் Rs.7 lakhs வரை இழப்பீடு; எப்படிப் பெறுவது?

விபத்து மற்றும் வேறு எந்தக் காரணத்தால் பணியாளர் உயிரிழந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும். கொரோனா போன்ற பெருந்தொற்று பாதிப்பால் இறந்தாலும் இழப்பீடு கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்காலத்தில் இறக்கும்பட்சத்தில் நாமினிக்கு பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (Employees Provident Fund Organisation – EPFO) ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு வழங்குகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும்.

இந்த செய்தியையும் படிங்க….

 கொரோனா வந்தவர்களுக்கு -அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன..?? 

20-க்கும் அதிகமான பணியாளர்களை ஒரு தனியார் நிறுவனம் கொண்டிருந்தால் அந்த நிறுவனம், இ.பி.எஃப்.ஓ  (EPFO) அமைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, பணியாளர்களுக்கு பிராவிடெண்ட் ஃபண்ட் PF வசதியை அளிக்க வேண்டும். சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பி.எஃப்(PF) ஆகப் பிடிக்க வேண்டும். அதே அளவு தொகையை நிறுவனமும் உறுப்பினர் பி.எஃப்(PF) கணக்கில் செலுத்த வேண்டும்.

இங்கே நிறுவனம் செலுத்தும் 12% தொகையில் 3.67% பணியாளர் பி.எஃப்(PF) கணக்கில் சேரும். 8.33% அல்லது அதிகபட்சம் ரூ.1,250 பணியாளர் பென்ஷன் திட்டத்தில் சேரும். 0.5% அல்லது அதிகபட்சம் ரூ. 75 பணியாளர்கள் டெபாசிட் இணைந்த காப்பீடு (Employees Deposit Linked Insurance -EDLI) பாலிசிக்காகச் செல்கிறது. இடிஎல்ஐ (EDLI) திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற, பி.எஃப் (PF) உறுப்பினர் தொடர்ந்து ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.

இந்த இ.டி.எல்.ஐ (EDLI)  திட்டத்தில் பணம் பிடிக்கப்படும் பணியாளர், பணிபுரியும் காலத்தில் மரணமடைந்தால் அவரின் நாமினி அல்லது வாரிசுக்கு இழப்பீடு வழங்கப்படும். உறுப்பினர் அடிப்படை சம்பளத்தைப் பொறுத்து குறைந்தபட்ச இழப்பீடு ரூ.2.50 லட்சமாகவும் அதிபட்ச இழப்பீடு ரூ.7 லட்சமாகவும் உள்ளது.

விபத்து மற்றும் வேறு எந்தக் காரணத்தால் பணியாளர் உயிரிழந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும். கொரோனா போன்ற பெருந்தொற்று பாதிப்பால் இறந்தாலும் இழப்பீடு கிடைக்கும்.

இழப்பீடு

உறுப்பினர் உயிரிழந்தால் 5- IF படிவத்தைப் பூர்த்தி செய்து, பணிபுரியும் நிறுவனத்தின் அதிகாரியிடம் கையொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன் நாமினி அல்லது வாரிசின் ரத்து செய்யப்பட்ட வங்கிக் காசோலை, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றையும் அத்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

இறந்தவரின் பி.எஃப் (PF) கணக்கில் உள்ள பணம் உட்பட இதர பயன்களைப் பெற படிவம் 20 (பி.எஃப்(PF)  தொகை), படிவம் 10D (ஓய்வூதியம்) ஆகியவற்றைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏழு பணி நாள்களுக்குள் இந்த இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். நாமினியின் வங்கிக் கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும்.

வங்கி காப்பீடு: மே 25 முதல் மே 31 வரை மிக முக்கியம்..!

பிரதமரின் விபத்துக் காப்பீட்டு பாலிசியில் (பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா – PMSBY) ரூ.12 பிரீமியத்தில் ரூ. 2 லட்சம் கவரேஜ் அளிக்கப்படுகிறது. பிரதமரின் ஆயுள் காப்பீட்டு பாலிசியில் (பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா – PMJJBY) ரூ.330 பிரீமியத்தில் ரூ. 2 லட்சம் கவரேஜ் அளிக்கப்படுகிறது.

இந்த செய்தியையும் படிங்க….

(MYCORMYCOSIS)நோயை குணப்படுத்த ‘அம்போடெரிசின்-பி’(AMPHOTERICIN B)- மருந்து ..!!  

இந்த இரு காப்பீடுகளும் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பிரீமியம் வங்கி சேமிப்புக் கணக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே 25 முதல் மே 31 வரை எடுக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் இதற்கான தொகை ரூ.342 வங்கிக் கணக்கில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.l

Leave a Comment