(PF) பணத்தை ONLINE-ல் எடுக்கவேண்டுமா? இதோ உங்களுக்கான தகவல்கள்..!! - Tamil Crowd (Health Care)

(PF) பணத்தை ONLINE-ல் எடுக்கவேண்டுமா? இதோ உங்களுக்கான தகவல்கள்..!!

(PF) பணத்தை  ONLINE-ல் எடுக்கவேண்டுமா? இதோ உங்களுக்கான தகவல்கள்..!!

மாத சம்பளம் வாங்கும் அனைத்து தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இ.பி.எப். (EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (Employee Provident fund) வழங்கி வருகிறது. பொதுவாக இது மாதம் தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது பி.எப். (PF)கணக்கில் டெபாசிட்(Deposit) செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் இந்த பணத்தினை தற்பொழுது தேவைப்படும் பொழுதுPF advance ஆகவும், பணி ஓய்வுக்குப் பின்னர் முழுமையாக எடுக்கவும்PF அலுவலகம் அனுமதிக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க…

8th STD Pass போதும்-மாதம் ரூ.15,700 சம்பளத்தில்:தமிழகத்தில் அரசு வேலை..!!  

முன்னதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிப்பதற்கு யு.ஏ.என் (UAN) அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) எனப்படும் பொதுக் கணக்கு எண்ணும் அதனை ஆக்டிவேட் செய்ய பயன்படுத்திய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அத்துடன் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்AADHAAR NO , பான் எண் PAN NOபோன்றவையும் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

பி.எப்(PF) கணக்கினை ONLINEல் விண்ணப்பிப்பது எப்படி?

1. முதலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் epfindia.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று யு.ஏ.என்(UAN) மற்றும் பாஸ்வேட் (password) மூலம் நம்முடைய PF கணக்கிற்குள் உள்நுழைய வேண்டும்.

2. பின், ‘Online Services’ என்பதில் உள்ள ‘Claim’ என்பதைக் கிளிக் செய்யவும்.

3. இப்போது தோன்றும் பக்கத்தில் வங்கிக் கணக்கு எண்ணினை டைப் செய்து ‘Proceed For Online Claim’ என்பதை கிளிக் செய்யவும்.

4. புதிதாகத் திறக்கும் தனி பக்கத்தில் பணத்தை எடுப்பதற்கான காரணம், எவ்வளவு பணம் தேவை என்பன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்ட வேண்டும். இதில் முழு பணத்தையும் எடுக்க வேண்டுமா? பாதி தொகையை எடுக்க வேண்டுமா? பென்ஷனை மட்டும் எடுக்க வேண்டுமா எனக் தேர்வு செய்ய வேண்டும். (only PF withdrawl- Form19), (only pension withdrawl-Form 10c),( PF advance Form 31 ) என்பதனை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

5இதனையடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள முகவரிAddress, பாஸ்புக் முதல்பக்கம் அல்லது செக் புக் போன்றவற்றை இணைத்துக்கொள்ள வேண்டும்.

6. அடுத்து, ‘Get Aadhaar OTP’ என்பதை கிளிக் செய்தால் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ரகசிய குறியீட்டு எண் (One Time Password) SMS மூலம் கிடைக்கும். அதனை உரிய இடத்தில் டைப் செய்து ONLINE விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பித்த பின் அதன் நிலையை ‘Online Services’ என்பதில் உள்ள ‘Claim status’ என்பதைக் கிளிக் செய்து நாம் சரியாக தான் apply செய்துள்ளோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

மாதம் ரூ. 2,60,000 வரை சம்பளத்தில்- சென்னை துறைமுகத்தில்  (Port Trust)வேலை..!! 

இறுதியாக நாம் விண்ணப்பித்த விண்ணப்பம் தொழிலாளர் பணிபுரிந்த நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அந்நிறுவனத்திடம் ஒப்புதல் கிடைத்த பின்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி PF கணக்கில் உள்ள பணம் வங்கிக் கணக்கில் 10 நாட்களுக்குள் டெபாசிட் Deposit செய்து வைக்கப்படும்.

Leave a Comment