ONLINE -மூலம் DRIVING LICENCE -மகாராஷ்டிரா போக்குவரத்து துறை..!!
நாடு முழுவதும் கார், பைக் விற்பனை அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுவதை காணமுடிகிறது. அதேநேரத்தில் ஓட்டுநர் உரிமம் பெறவும் நாள்தோறும் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஒருவருடைய DRIVING LICENCE மற்றொருவர் தவறாகப் பயன்படுத்துவதாக புகார்கள் குவிந்தன. இதனையடுத்து நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை AADHAAR-ன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
BIG ALERT: மோசடி செய்யும் நபர்களிடமிருந்து யாரும் ஏமாறக்கூடாது -ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம்..!!
இந்நிலையில், மகாராஷ்டிரா போக்குவரத்து துறை துணை கமிஷனர் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில், இருசக்கர , நான்கு சக்கர வாகன ஓட்ட விரும்புபவர்கள் RDO அலுவலகத்துக்கு வருவதற்கு பதில் இப்போது அதை வீட்டில் இருந்தபடியே பெற முடியும். AADHAAR CARD-யை பயன்படுத்தி ஓட்டுனர் பயிற்சி உரிமத்தை ONLINE-ல் விண்ணப்பித்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் சட்டவிரோத முகவர்களை தடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது
இந்த முறைப்படி பொதுமக்களின் பணமும், நேரமும் மிச்சமாகும், அலுவலக ஊழியர்கள் வேலைப்பளுவும் குறைவதாக மகாராஷ்டிரா போக்குவரத்து துறை துணை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஓட்டுனர் பயிற்சி உரிமங்களை மகாராஷ்டிரா அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.