NET EXAM-தேர்வு 3-வது முறையாக ஒத்திவைப்பு..!!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி(UGC|) NET தேர்வுகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை NET தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க.
10-ஆம் வகுப்பு- மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு.!
இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு NET தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கரோனா பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது முறையாக NET தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் தேர்வு எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு NET தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.