NEET தேர்வுக்கு மாணவர்கள் கட்டாயம் தயாராக வேண்டும் ;அது தவறு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!
NEET தேர்வுக்கு மாணவர்கள் கட்டாயம் தயாராக வேண்டும் அது தவறு இல்லை இதனால் மாணவர்கள் உயிர் போகக் கூடாது, NEET தேர்வு நடக்க கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடு அதில் மாற்றமில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க….
BREAKING: PLUS TWO வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை: ஸ்டாலின் வெளியிட்டார்..!!
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியின் கூறுகையில், எதிர்கட்சி தலைவருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சட்டபேரவையில் தெளிவாக பதிலளித்துவிட்டார். NEET தேர்வை பொறுத்தவரை 2011ல் கலைஞர் அதை ஏற்காமல் தடுத்த பெருமை கலைஞரை சாரும். அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை கூட அனுமதிக்கவில்லை. எப்போது பழனிச்சாமி வந்தாரோ அப்போது தான் NEET வந்தது. மாணவர்கள் மீது அக்கறை உள்ளது போல் பேசுகிறார் பழனிச்சாமி.
இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அரசு பள்ளி மாணவர்களுக்காக உள்ஒதுக்கீடு வலியுறுத்தி பெற்றார். NEET தேவையில்லை என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. எப்போது தீர்மானம் நிறைவேற்றினாலும் தடையை பெறும் நோக்கில் தான் அரசு குழு அமைத்து அறிக்கை , அரசு தீர்மானம், ஒன்றியரசை வலியுறுத்துதல் என அரசு பணிகளை கொண்டு வருகிறது.
குறுகியகாலம் தான் உள்ளது NEET ரத்து என்று வந்தால் மிக மகிழ்ச்சி. தடை என்று வந்தால் சரி. அதற்காக அரசு பல்வேறு பணிகள் மேற்கொள்கிறது. இருப்பினும் தாமதமாகும் பட்சத்தில் தேர்வுக்கு தயாராவதில் தவறில்லை. தேர்வு வந்தால் மதிப்பெண் வாங்கலாம் இல்லை என்றால் ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி. பல ஆண்டுகால முயற்சி ஒரிரு மாதத்தில் அதை தடுக்க இயலுமா.? என்பதை அனைவரும் அறிவர் பழனிச்சாமி ஏன் இதை அறியவில்லை என்றார்.
இந்த செய்தியையும் படிங்க….
BREAKING: யாருக்கெல்லாம் PLUS TWO மறு தேர்வு: அமைச்சர் விளக்கம்..!!
மேலும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் அரசின் சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடக்கிறது அங்கு செல்லவேண்டும். அதை தவிர்த்து மருத்துசேவை என்று யார் வந்தாலும் அவர்கள் யார் என்று அடையாள அட்டையை சரிபார்க்கவேண்டும். ஒரு நாளைக்கு 7-8லட்சம் தடுப்பூசி போடுவதற்கு கூட வழிவகை உள்ளது. ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி பெற்று செலுத்தி வருகிறோம். நிச்சயம் அதிகம் பெற்று மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவோம். தடுப்பூசி போடாதாவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.