NEET தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு – நீதியரசர் ஏ.கே.ராஜன்..!!
NEET தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியையும் படிங்க…
உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை- இந்த வாரத்தில் முடிவு தெரியும்: அமைச்சர் பேட்டி..!!
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ. ஜே.ராஜன், NEET தேர்வால் பாதிப்பு உள்ளது என்றும் அது குறித்த தகவல்களை சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேரின் கருத்தும் NEET தேர்வால் பாதிப்பு உள்ளது என்பதுதான் என அவர் குறிப்பிட்டார்.