NEET தேர்வுக்கு எதிர்ப்பு மசோதா நேற்று நிறைவேறியது;பா.ஜ.,வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு..!! - Tamil Crowd (Health Care)

NEET தேர்வுக்கு எதிர்ப்பு மசோதா நேற்று நிறைவேறியது;பா.ஜ.,வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு..!!

 NEET தேர்வுக்கு எதிர்ப்பு  மசோதா நேற்று நிறைவேறியது;பா.ஜ.,வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு..!!

சட்டசபையில் நேற்று மாலை நிறைவேற்றப்பட்ட, NEET தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்கு, அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்தது; பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

அப்போது சபையில் நடந்த விவாதம்:

முதல்வர் ஸ்டாலின்:

 2021ம் ஆண்டு MBBS., மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர்: 

NEET தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை சபை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமிழக மக்கள் நன்மைக்காக, முன்னேற்றத்திற்காக NEET தொடர்பாக, தற்போது இந்த அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவை அ.தி.மு.க., சார்பில் வரவேற்கிறோம்.

முதல்வர்: 

மசோதாவை வரவேற்பதாக எதிர்க் கட்சி தலைவர் கூறியுள்ளார். அவருக்கு நன்றி.

இந்த செய்தியையும் படிங்க….

 அரசுப் பள்ளிகளில் கற்றல் இழப்பைச் சரிசெய்ய தனி இயக்கம்;  Spoken English Classes; முதல்வர் ஸ்டாலின்..!!

பா.ஜ., – நயினார் நாகேந்திரன்: 

NEET தொடர்பாக முதல்வர் கொண்டுவந்த சட்ட மசோதாவை எதிர்த்து, பா.ஜ., வெளிநடப்பு செய்கிறது.

சட்ட மசோதா நிறைவேறியது:

இவ்வாறு விவாதம் நடந்தது.பா.ஜ.,வை தவிர அனைத்து கட்சிகளும், NEET தேர்விற்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, சட்ட மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Leave a Comment