(MYCORMYCOSIS)நோயை குணப்படுத்த ‘அம்போடெரிசின்-பி’(AMPHOTERICIN B)- மருந்து ..!!
கொரோனா நோயாளியின் கண்ணை பாதிக்கும் ‘மியுகோர்மைகோசிஸ்’(MYCORMYCOSIS) நோயை குணப்படுத்த ‘அம்போடெரிசின்-பி’(AMPHOTERICIN B) மருந்து பரிந்துரைக்கப்பட்டாலும், அம்மருந்து கிடைக்காமல் பல மாநிலங்கள் தவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புதிய அச்சுறுத்தலாக கறுப்பு பூஞ்சை(Black Fungi) எனப்படும் ‘மைகோர்மைகாஸிஸ்’ (MYCORMYCOSIS)என்ற தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க….
கொரோனா வந்தவர்களுக்கு -அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன..??
மகாராஷ்டிராவில் 2,000 பேர் பாதிப்பு, குஜராத்தில் 1,163 பேர் பாதிப்பு, மத்திய பிரதேசத்தில் 281 பேர் பாதிப்பு மற்றும் உத்தரபிரதேசத்தில் 73 பேர் பாதிப்பு, தெலங்கானாவில் 60 பேர் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கான மருந்து கிடைக்காமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தவிக்கின்றன. இந்நிலையில், இந்த ‘மியுகோர்மைகோசிஸ்’ (MYCORMYCOSIS) நோயை குணப்படுத்துவதற்காக ‘அம்போடெரிசின்-பி’ (AMPHOTERICIN B)என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
அதனால், இம்மருந்தின் தேவை மற்றும் விநியோக நிலை குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா டெல்லியில் ஆய்வு செய்தார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும், உற்பத்தியாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. மேலும், பல நாடுகளில் இருந்து இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மன்சுக் மண்டவியா கூறுகையில், ‘அம்போடெரிசின்-பி’ (AMPHOTERICIN B)மருந்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தேவை இருக்கும் நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த செய்தியையும் படிங்க….
திருமண விழா – (TN eRegistration) :தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது..!!
அம்போடெரிசின்-பி(AMPHOTERICIN B) மருந்தை முறையாக வழங்கவும், விநியோக சங்கிலி மேலாண்மையை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு எடுத்து வருகிறது. மருந்தின் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும். மாநில அரசுகள் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, சரியான வழியில் இம்மருந்தைப் பயன்படுத்த வேண்டும்’ என்றார்.