Mucormycosis: யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்? தற்காப்பாக எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது?
Mucormycosis என்பது கொரோனா வைரஸால் தூண்டப்படும் ஒரு பூஞ்சை தொற்றாகும். இது சமீப காலங்களில் உருப்பு மாற்றுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் ஐ.சி.யுகளில் தீவிர நிலையில் உள்ள நோயாளிகளின் நோய் மற்றும் இறப்புக்கு ஒரு காரணியாக இருந்து வருகிறது. இது ஜைகோமைகோசிஸ் (Zygomycosis) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
கட்டுக்கடங்காத நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நீண்டகாலமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) தங்கியிருக்கும் COVID-19 நோயாளிகளில் காணப்படும் மியூகோமைகோசிஸ் அல்லது ‘கருப்பு பூஞ்சை’ தொற்று, கவனிக்கப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறக்கூடும் என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த பூஞ்சை தொற்று முக்கியமாக பல வித நோய்களுக்கான மருந்துகளை உட்கொண்டு வருபவர்களை பாதிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த பூஞ்சை (Black Fungus) சுற்றுச்சூழல் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் அவர்களது திறனைக் குறைத்து அவர்களது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றும் சுகாதார நிபுணர்கள் மேலும் தெரிவித்தனர்.