(Mucormycosis): அறிகுறிகள், சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!! - Tamil Crowd (Health Care)

(Mucormycosis): அறிகுறிகள், சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!!

 (Mucormycosis): அறிகுறிகள், சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!! 

கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில், மற்றொரு பயங்கரமான நோய் உருவாகியுள்ளது. இது கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படுகிறது. இது முக்கோராமைகோசிஸ்( mucormycosis)  என்று கூறப்படுகிறது. இந்த நோய் கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளிடம் அதிகமாக காணப்படுகிறது. இது நோயாளியின் தோல், கை கால்கள் மற்றும் மூளையை பாதிக்கிறது. இந்த நோயைத் தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்திய முறை.! உணவுக் கட்டுப்பாடு.! 

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்து, கருப்பு பூஞ்சை (Black Fungus) பற்றிய தகவல்களை அளித்தார். 

 (Mucormycosis) அல்லது Black Fungus என்றால் என்ன?

கருப்பு பூஞ்சை என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இது கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக உடலில் ஏற்படுகின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கருத்துப்படி, கருப்பு பூஞ்சை என்பது உடலில் மிக வேகமாக பரவுகின்ற ஒரு அரிய நோயாகும். மேலும் இது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கு முன்பு வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக உள்ளவர்களையும் இது அதிகமாக பாதிக்கிறது.

எந்த நபர்களுக்கு  நோய்க்கான ஆபத்து அதிகம்?

ஹர்ஷ் வர்தனின் கூற்றுப்படி, 

  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் (Sugar Level) கட்டுப்படுத்தாதவர்கள், 
  • நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்கள், 
  • ஸ்டெராய்டுகளை உட்கொள்ளும் நபர்கள், 
  • கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீண்ட காலமாக( ICU) மருத்துவமனைகளில் இருந்தவர்கள்,
  •  உறுப்பு மாற்று மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள்,
  •  மிகவும் கடுமையான பூஞ்சை தொற்று ஏற்பட்டவர்கள் 

ஆகியோருக்கு கருப்பு பூஞ்சைக்கான அதிக ஆபத்து உள்ளது.

கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள்(Symptoms):

கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும்:

  1.  கண்களில் அல்லது கண்களைச் சுற்றி சிவப்பாக இருப்பது அல்லது வலி இருப்பது
  2.  அடிக்கடி காய்ச்சல்
  3.  தலையில் கடுமையான வலி
  4.  சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல்
  5.  இரத்த வாந்தி
  6.  மன நிலையில் மாற்றம்

கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்(Treatment):

  • நோயாளி ஹைப்பர் கிளைசீமியாவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதாவது நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 
  • கோவிட் -19 ல் இருந்து மீண்டு, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், வீட்டிற்கு வந்த பிறகும் இரத்த குளுக்கோஸ் அளவை குளுக்கோமீட்டரின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.
  •  ஸ்டெராய்டுகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மருந்துகளுக்கான சரியான அளவுகள் மற்றும் நேர இடைவெளிகளை அறிய வேண்டும். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

என்ன செய்யக்கூடாது

 மூக்கு அடைபட்டால், அது சைனஸ் பிரச்சனை தான் என எண்ணி அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். குறிப்பாக கோவிட் -19 நோயாளிகள் மூக்கடைப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். (Mucormycosis) அல்லது Black Fungus சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் நோயாளி இறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம்.

இந்த செய்தியையும் படிங்க…

காலையிலே இந்த பாலை குடிச்சா -கால் வலி வராது..!! 

(Mucormycosis) அல்லது Black Fungus  கண்கள், மூக்கு மற்றும் தாடையும் பாதிக்கிறது.

  • Black Fungus கோவிட் தொற்றுநோயிலிருந்து மீண்ட நோயாளிகளின் கண்பார்வையை பறிப்பது மட்டுமல்லாமல், இந்த பூஞ்சை தோல், மூக்கு மற்றும் பற்கள் மற்றும் தாடையையும் சேதப்படுத்துகிறது. 
  • மூக்கு வழியாக, இது நுரையீரல் மற்றும் மூளையை அடைந்து நோயாளியின் உயிரை எடுக்கும் அளவு அபாயகரமானது.
  •  இது ஒரு தீவிர நோயாகும். நோயாளியை நேரடியாக (ICU) வில் அனுமதிக்க வேண்டும். எனவே, அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிவது மிகவும் முக்கியம்.

Leave a Comment