MOTIVATIONAL WORDS:POSITIVE THINKING (நேர்மையான
சிந்தனைகள்)
POSITIVE THINKING (நேர்மையான சிந்தனைகள்)
‘மனம் போல வாழ்வு’,
‘மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு’
மூளையையும், மனதையும் நல்ல சிந்தனைகளால் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தீய சிந்தனை தாமாகவே மூளையில் ஏறி அமர்ந்து கொண்டு நம்மை தீய வழியில் நடத்திச் செல்லும்.
எந்தச் செயலுக்கும் அடிப்படை சிந்தனையே, அதைப்பற்றி கூறும்போது,
”உங்களுடைய சிந்தனையை கவனியுங்கள்
ஏனென்றால் அது உங்கள் செயலாக மாறுகிறது.
உங்களுடைய செயல்களை கவனியுங்கள்
ஏனென்றால் அது உங்கள் வழக்கமாக மாறுகிறது.
உங்களுடைய வழக்கத்தைக் கவனியுங்கள்
ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையாக மாறுகிறது.”
– ஒரு மேதை.
எதைப்பற்றி சிந்திக்க வேண்டும்:
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
-புரட்சிக்கவி
நல்லதையே நாம் எண்ண வேண்டும். அப்படிச் செய்தால் எண்ணியது முடியும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத உறுதியான மனம் அமையப் பெறும். குழப்பம் இல்லாத தெளிந்த நல்லறிவு வாய்க்கப் பெறும், எண்ணம் அனைவருக்கும் நன்மை விளைவிக்கும் படியாகவே இருக்க வேண்டும்.
”உள்ளத்தால் உள்ளலும் தீதே” -வள்ளுவர்
மனதளவில் கூட தீயவற்றை நினைக்கக்கூடாது என்றும், அவ்வாறு தீய சிந்தனைகள் ஏற்பட்டாலே ஒருவன் அழிந்து விடுவான் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
POSITIVE THINKING (நேர்மையான சிந்தனைகள்):
மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன.
- தெளிவான குறிக்கோளே வெற்றியின் ஆரம்பம்.
- இலட்சியம் இல்லாத வாழ்க்கை எண்ணை இல்லா விளக்குக்கு சமம்.
- உண்மையான ஆலயம் இதயத்தில் தான் அமைந்துள்ளது.
- ஒரு நிமிட கோபம் ஓராயிரம் வருட புகழை அழித்துவிடும்.
- தனக்கு மட்டும் நல்லவனாக இருப்பவன் எதற்கும் பயன்பட மாட்டான்.
- வேலை செய்ய நேரம் எடுத்துக்கொள் அது வெற்றியின் விலை.
- தோல்வி மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை உள்ளத்தில் நுழையவே இடம் தரக்கூடாது.
- தோல்வியில் இறக்கம் கூடாது. வெற்றியில் கர்வம் கூடாது.
- ஏராளமான வாய்ப்புகள் வரும்போது எச்சரிக்கையாய் இரு.
- ஏக்கமும், தூக்கமும் ஊக்கத்தை கெடுக்கும்.
- தோல்வியடைவது குற்றமில்லை முயற்சி இல்லாத வாழ்வு குற்றமுடையது.
- பொறுமையும், தன்னடக்கமும் வாழ்வின் பிற்பகுதியை வெற்றியாக்கும்.
- தயங்குவது என்பது தோல்விக்கு அடையாளம் ஆகும்.
- கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளை இடுதலையும் அறிவான்.
- இன்பத்தில் உண்டாவது மறதி, துன்பத்தில் உண்டாவது உறுதி.
- அதிகாரத்தை வெல்வது அன்பு, பயத்தை வெல்வது துணிவு.
- நல்லவனாய் பிறப்பது சந்தர்பத்தினால், நல்லவனாக வாழ்வது முயற்சியினால்.