MEDICAL TECHNICAL TRAINING- இலவசமாக பயில அழைப்பு:TNSDC..!!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்(TNSDC) மூலம் நடத்தப்பட உள்ளஇலவச மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
கலெக்டர் பாலசுப்ரமணியம் செய்திக்குறிப்பு:
கொரோனா CORONA தொற்று காரணமாக சுகாதார துறையில் நிலவி வரும் MEDICAL ASSISTANTS மற்றும் இதர MEDICAL TECHNICAL ASSISTANTS பற்றாக்குறையைப் போக்கும் வகையில், HEALTHCARE SECTOR COUNCIL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மூலம் மத்திய அரசின் பி.எம்.கே.இ.ஒய்.,(PMKEY) திட்டத்தின் கீழ் இலவசமாக குறுகிய கால திறன் பயிற்சியை 6 மருத்துவ பிரிவுகளில் அளிக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க…
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!
அதில் EMERGENCY MEDICAL TECHNICAL BASIC, GENERAL DUTY ASSISTANTS, G.T.A., ADVANCED CRITICAL CARE, HOME HEALTH AID, MEDICAL EQUIPMENTS TECHNOLOGY ASSISTANT, FILIPOTO MIST ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.பயிற்சி முடிந்ததும், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொழில்முறை பயிற்சியுடன் தற்காலிகமாக பணிபுரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
பயிற்சிகளில் 10th முதல் Degree முடித்தவர்கள் வரை பயிற்சி பெறலாம்.பயிற்சிகளில் சேர விரும்புவோரதங்களது
- பெயர்,
- கல்வித் தகுதி,
- பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு,
- தொலைபேசி எண்
ஆகியவற்றை govtric.cud@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மொபைல் எண்.94879 21344, 86674 11696 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.