LOCKDOWN -ல் கூடுதல் தளர்வுகள் .? முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!
தமிழ்நாட்டில் CORONA தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் LOCKDOWN -ல் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்களில் அத்தியாவசியக் கடைகள், பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
கல்வித் தொலைக்காட்சியில் (2021-2022) பாடங்கள்:முதல்வா் (JUNE 19) தொடக்கி வைக்கிறாா்..!!
இந்நிலையில், தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். 50 சதவீத பேருந்துகளை இயக்குவது, 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளிக் கடைகளை திறப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.