Kendra Vidyalaya Admission Procedure - மாணவர் சேர்க்கையில் புதிய அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

Kendra Vidyalaya Admission Procedure – மாணவர் சேர்க்கையில் புதிய அறிவிப்பு..!!

 Kendra Vidyalaya Admission Procedure – மாணவர் சேர்க்கையில்

 புதிய அறிவிப்பு..!!

Kendra Vidyalaya School:

மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாக உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதும் KV., பள்ளிகள் செயல்படுகின்றன.

முன்னுரிமை:

அதாவது 

  • ராணுவத்தினர், 
  • மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் 
  •  பொதுத்துறை நிறுவனத்தினர் போன்றோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை

 அளித்து இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதையடுத்து மீதம் உள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.

புதிய கல்வி கொள்கை:

இந்த பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது அந்த ஆண்டு மார்ச் 31 அல்லது ஏப்., 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி பல வருடங்களாக உள்ளது. வரும் 2022- 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது. அதில் 1ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு புதிய கல்வி கொள்கையின்படி 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள் சேர்க்கைக்கான வயது வரம்பு உயர்வு:

அதாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான வயது வரம்பு 5-லிருந்து 6-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 வயது நிரம்பிய மாணவர்களை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ஆம் வகுப்பில் சேர்க்கலாம். இன்று (பிப்.28) முதல் kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 5 வயது நிறைவடைந்தால் போதும் என்ற நிலையில், தற்போது 6 வயது நிறைவடைய வேண்டும் என்று திடீரென வயது வரம்பை உயர்த்தியுள்ளதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு KV., பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படும். 

Leave a Comment