”JUNE 3வது வாரத்திற்குள் `PLUS ONE வகுப்புகளை தொடங்குவது- சாத்தியமில்லை..!!”-ராமதாஸ்.
JUNE 3வது வாரத்திற்குள் PLUS ONE வகுப்புகளை தொடங்குவது சாத்தியமில்லை என்று சொல்லும் பாமக நிறுவனர் ராமதாஸ் PLUS ONE மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டிக்க கோருகிறார்.
இந்த செய்தியையும் படிங்க…
வீடுகளுக்கான துல்லியமான மின்கட்டணத்தை கணக்கிட்டு செலுத்துவது எப்படி?… மின்வாரியத்துறை விளக்கம்..!!
தமிழ்நாட்டில் PLUS ONE மாணவர் சேர்க்கைக்கான ENTERENCE EXAM ரத்து செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை. மாணவர் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். 9th வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 9th வகுப்புக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படாத நிலையில் இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும். 2019-2020 கல்வியாண்டில் 9th வகுப்பில் நடத்தப்பட்ட எந்தெந்த தேர்வுகளின் மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பை பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
உயர்நிலைப்பள்ளிகளில் படித்து மேல்நிலைப்பள்ளிகளில் plus one விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல் இருக்காது. அவர்களுக்கு அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல் வழங்க அரசு ஆணையிட வேண்டும். இவை அனைத்தையும் முடித்து JUNE மூன்றாவது வாரத்திற்குள் வகுப்புகளை தொடங்குவது சாத்தியமில்லை என்பதால் PLUS ONE வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை சில வாரங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.