JUNE 21 முதல்- 50 சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!
நாடு முழுவதும் முதல், 50 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேற்று துவங்கியது.CORONA தொற்று பரவல், முதல் அலை காரணமாக கடந்தாண்டு MARCH, 22 முதல் எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில்கள் மற்றும் மெட்ரோ புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
இந்த செய்தியும் படிங்க…
RDO அலுவலகங்கள் நவீனமயமாக்க செயல் திட்டங்கள்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்..!!
தற்போது, பல மாநிலங்களில் CORONA தொற்று குறைந்துள்ள நிலையில், JUNE 21 முதல் நாடு முழுவதும், 50 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, இந்திய ரயில்வே வாரியம் அறிவித்தது. தமிழகத்தில், 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதையடுத்து, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்பதிவு தொடங்கியது. அப்போது, 50க்கும் மேற்பட்டவர்கள், கரூர் வழியாக செல்லும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய, வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
இந்த செய்தியும் படிங்க…
LOCKDOWN நீட்டிப்பு:11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை..!!
மேலும், கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு கடந்த சில நாட்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் நேற்று காலை, 11:30 மணிக்கு கரூர் வந்தது. அதில் ஏராளமான பயணிகள் ஏறி திருச்சி சென்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகம் பல மாதங்களுக்கு பிறகு, நேற்று பரபரப்பாக காணப்பட்டது.