JUNE 16: ஸ்டாலினின் டெல்லி பயணம்..!!
தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் JUNE 16 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வராக பதவியேற்பவர்கள் மரியாதை நிமித்தமாக பிரதமர்களை சந்திப்பது இந்திய அரசியலில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்தான்.
இந்த செய்தியையும் படிங்க…
New ATM rules : AUGUST மாதத்தில் ATM- பயன்பாட்டிற்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு..!!
DMK ஒன்றிய அரசான BJP-வை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் முதல்வர் மற்றும் பிரதமர் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் போது தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.