JULY -5 முதல் மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்திற்கு அனுமதி;e-Registration ரத்து..!! - Tamil Crowd (Health Care)

JULY -5 முதல் மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்திற்கு அனுமதி;e-Registration ரத்து..!!

 JULY -5 முதல் மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்திற்கு அனுமதி;e-Registration ரத்து..!!

இன்று முதல் மாவட்டங்களுக்கிடையே பயணிக்க பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,இ-பதிவு முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இந்த செய்தியையும் படிங்க…

 “இதையெல்லாம் செய்தாலே கொரோனா நம்மை அண்டாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!

தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவியது.கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு,பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 3 வகையாக பிரித்து நீட்டிக்கப்பட்டு, 27 மாவட்டங்களுக்கிடையே மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து,இன்று (JULY 5)முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

 இந்த செய்தியையும் படிங்க…

 எச்சரிக்கை:கொரோனா 3ஆவது அலை: அக்டோபா்-நவம்பரில் உச்சத்தில் இருக்கும்..!! 

மாவட்டங்களுக்கிடையே பயணிக்க e-Pass/ e-Registration நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

Leave a Comment