JIPMER: JULY 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்..!! - Tamil Crowd (Health Care)

JIPMER: JULY 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்..!!

 JIPMER: JULY 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்..!!

                                                                                                                                                                                                                         

புதுச்சேரி, காரைக்கால் JIPMER மையங்களில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் JULY 1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

இந்த செய்தியும் படிங்க… 

அரசு பள்ளிகளில் -கல்வி  தரத்தை மேலும் உயர்த்த அரசு ஆலோசனை..!!  

இதுகுறித்து JIPMER நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

”புதுவையில் CORONA பாதிப்பு குறைந் MBBS முதலாமாண்டு மாணவர்கள், B.Sc.,நர்சிங் (முதல், இரண்டாம், மூன்றாமாண்டு) மாணவர்கள், B.Sc., துணை மருத்துவப் படிப்புகள் (முதல், இரண்டாமாண்டு) பயிலும் மாணவர்களுக்கு வரும் JULY 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. MBBS இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்குத் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

CORONA  தடுப்பூசி கட்டாயம்:

மாணவர்கள் CORONA தடுப்பூசியைக் கண்டிப்பாகச் செலுத்திக்கொள்ள வேண்டும். JIPMER வளாகத்தில் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை JIPMER வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம்.

CORONA தடுப்பூசி செலுத்தாதவர்கள், CORONA பரிசோதனைக்குப் பிறகே JIPMER மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள் நேரடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம்.

இந்த செய்தியும் படிங்க…  

அதிர்ச்சி.! 30 லட்சம்  IT ஊழியர்கள் வேலை இழப்பார்கள்..!!  

வகுப்புகளில் மாணவர்கள் CORONA விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வகுப்புகளிலிருந்து இடைநீக்கமும் செய்யப்படுவர்”. இவ்வாறு JIPMER நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment