ITI-ல்: அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பம்..!!
தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர www.skilltraining.tn.gov.in ல் ஜூலை 28 க்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த செய்தியையும் படிங்க…
மாணவர்களுக்கு உதவ அரசு ITI., வேலை வாய்ப்பு அலுவலகம், திறன் பயிற்சி அலுவலகங்களில் மையங்கள் உள்ளன.8, 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50 யை டெபிட், கிரெடிட் கார்டு, கூகுள் பே மூலம் செலுத்தலாம்.
இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல், கலந்தாய்வு குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். விவரங்களுக்கு 94990 55761ல் பேசலாம் என, திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.