IFHRMS Latest News
ஆசிரிய நண்பர்கள் கவனத்திற்கு:
தற்போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு IFHRMS முறை மூலம் ஊதியம் வழங்கப் படுகிறது.
ஊதியம் ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்த அடுத்த நாள், IFHRMS இணையத்திலிருந்து, நமது கைபேசிக்கு ஊதிய விவரம், குறுஞ்செய்தியாக தெரிவிக்கப் படுகிறது.
அந்த குறுஞ்செய்தியில், வரும் இணைய இணைப்பு மூலம், நமது 11 இலக்க IFHRMS ID NUMBER, மற்றும் நமது Date of Birth (DDMMYYYY 8 இலக்க format) பயன் படுத்தி, Login செய்து, வலது பக்க மேலே உள்ள Reports ஐ Click செய்து, நமது ஊதியப் பட்டியலை (Pay details & All Deduction Details and Net pay) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அத்துடன் நமது மின்னஞ்சலுக்கும் ஊதியப் பட்டியல் வருகிறது.
ஆசிரியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
உங்கள் கைபேசிக்கு IFHRMS இணையத்திலிருந்து, ஊதிய விவர குறுஞ்செய்தி வராவிட்டால், உங்கள் அலுவலகத்தில் ஊதியப் பட்டியல் தயாரிப்பவரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உங்கள் கைபேசி எண் & மின்னஞ்சல் முகவரியை IFHRMS இணையத்தில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளுங்கள்.
வருங்காலத்தில், இந்த இணையம் மூலம், நமது e-SR ஐ பார்க்க முடியும்.
மேலும் ஆசிரியர்களின் விடுப்பு விண்ணப்பம், பணப் பயன் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களையும் இந்த இணைய தளத்தை பயன் படுத்தியே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலை வர உள்ளது.
விண்ணப்பிக்கும் போதே, உரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதன் மூலம், விண்ணப்பத்திற்கு உடனடி தீர்வு காணப்படும்.
ஆகவே, இப்போதே உங்கள் கைபேசி, மின்னஞ்சல் முகவரியை, உங்கள் அலுவலகம் மூலம், IFHRMS இணையத்தில், பதிவு செய்ய விண்ணப்பியுங்கள்.