ICICI-வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை, 6.70 சதவீதமாக ICICI, வங்கி குறைத்துள்ளது.இது குறித்து,ICICI., வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், 6.80 சதவீதத்திலிருந்து, 6.70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 75 லட்சம் ரூபாய் வரை, வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், 6.70 சதவீத வட்டியில் பெற்று கொள்ளலாம்.
அதற்கு மேல் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, 6.75 சதவீதம் வட்டி விதிக்கப்படும். இந்த வட்டி விகிதம் என்பது, 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த வட்டி விகிதம். ICICI., வங்கி வாடிக்கையாளராக இல்லாதவர்கள் கூட, ‘ஆன்லைன்’ வாயிலாக வீட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.இந்த வட்டி விகிதம், நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும், 31 வரை, இந்த வட்டி விகிதம் அமலில் இருக்கும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.