Delta Plus அதிக அளவில் பரவக்கூடியது : WHO( டெட்ரோஸ் அதானோம்) எச்சரிக்கை..!!
கொரோனா வகைகளில்Delta வகை மாறுபாடு அதிகளவில் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க….
இந்தியாவில் 12 மாநிலங்களில் பரவியுள்ள DELTA PLUS வைரஸ்..!!
உலகில் 85க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 10 மாநிலங்களில் 48 பேர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 9 பேரிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் டெல்டா ப்ளஸ் வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் 3ஆவது அலைக்கு காரணமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் டெல்டா வகை வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வகைகளில் டெல்டா வகை மாறுபாடு, மிகவும் அதிகம் பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க….
இந்தியாவில் Delta Plus தீவிரம்: தமிழகத்தில் முதல் மரணம் பதிவு..!!
இந்த வகை வைரஸ் மாறுபாடு தடுப்பூசி செலுத்தப்படாத மக்களிடையே வேகமாக பரவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.