Credit card : கடன் சுமையை தவிர்க்க வேண்டுமா? இந்த தவறுகளை செய்யாதிங்க..!!
Credit Card சுமைகளை தவிர்க்க:
பணத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தும் கார்டு கிரெடிட் கார்டு(Credit card). பணத்தை உடனடியாக பெறுவது, கடன் பெறுவது மட்டுமல்லாமல் கேஷ்பேக்(Cash Pack), தள்ளுபடி(Discount) போன்ற பல்வேறு சலுகைகள் இந்த கிரெடிட் கார்டு மூலம் நமக்கு கிடைக்கின்றது. எனினும் நாம் இஷ்டத்திற்கு இதனை பயன்படுத்தினால் நிறைய கடன் சுமைகளிலும், பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்வோம். கடன் சுமையை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
கடன் சுமையை எப்படி தவிர்ப்பது:
கிரெடிட் கார்ட் பில்லை முழுமையாக திருப்பி செலுத்தாமல் இருப்பது மிகவும் ஆபத்து. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் சுமார் 24 சதவீதம் முதல் 49 சதவீதம் வரை வட்டி விதிக்கின்றது. பல மாதங்கள் தொகையை நீங்கள் செலுத்தாமல் இருந்தால் அது உங்களுக்கு கடன் சுமையை அதிகப்படுத்தும்.
சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்:
கிரெடிட் கார்டு (Credit Card)அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம் கூடுதல் கட்டணங்களை நம்மால் தவிர்க்க முடியும் என்று பலரும் கருதுகின்றனர். நிலுவை தொகையை நாம் செலுத்துவதால் சுமார் 1300 ரூபாயை சேமிக்கலாம். இதனால் சிபில் ஸ்கோர் உங்களுக்கு பாதிக்கப்படும். செலுத்தப்படாத தொகைக்கும் கட்டணம் விதிக்கப்படும்.
3.5 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்படும்:
ஏடிஎம்(ATM)களில் பணம் எடுப்பதற்கு நீங்கள் கிரெடிட் கார்டு(Credit Card) பயன்படுத்தினால் அதற்கு அதிக கட்டணம் விதிக்கப்படும். எடுக்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்தும் வரை கட்டணம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் இதற்கு 3.5 சதவீதம் வரை கட்டணம் விதிக்கின்றது. எனவே ஏடிஎம்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்காக பணம் எடுத்தாலும் கூட, அதை விரைவில் செலுத்திவிட வேண்டும்.