CORONA TREATMENT: செலவுகளை சமாளிக்க SBI வழங்கும் கடன்..!!
SBI bank Personal Loan scheme Kavach : இந்த ஒரு வருடம் கொரோனாவால் நமக்கு எவ்வளவு பிரச்சனைகள். நம்முடைய உற்ற உறவினர்களுக்கு கொரோனா வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் நம்மை உயிரோடு கொன்றுவிட்டது என்று தான் கூற வேண்டும்.
SBI வங்கி சமீபத்தில் கொல்லாட்ரல் ஃப்ரீ கவாச்(collateral Free kavash) தனிநபர் கடனை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான corona மருத்துவ சிகிச்சைக்காக நீங்கள் இந்த கடனை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் Work From Home பணியாளர்கள் கவனத்திற்கு..!!
ரூ. 5 லட்சம் வரை நீங்கள் பெறும் இந்த கடனுக்கு வருடத்திற்கு 8.5% வட்டி மட்டுமே. 60 மாதங்களில் திருப்பி அடைக்க வேண்டிய இந்த கடனுக்கு 3 மாதங்கள் வரை மொராட்டோரியமும் உண்டு. தற்போது நிதி பற்றாக்குறையால் பெரிதும் அவஸ்திபட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த கடனானது மிகப்பெரிய அளவில் உதவும் என்று வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.