CORONA-ல் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி-கர்நாடகா முதலமைச்சர்..!! - Tamil Crowd (Health Care)

CORONA-ல் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி-கர்நாடகா முதலமைச்சர்..!!

 CORONA-ல் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி-கர்நாடகா முதலமைச்சர்..!!

CORONA தொற்றால் உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்தச் செய்தியையும் படிங்க… 

CORONA : தடுப்பூசி கட்டாயம் தேவையா..??தடுப்பூசியின் பயன் தான் என்ன?  

CORONA முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் அதிகம் பாதித்த மாநிலமாக கர்நாடகா உள்ளது. அங்கு வைரஸ் தொற்றுக்கு இதுவரை 32,913 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதிலும் குடும்பத்தலைவர்கள் பலரும் உயிரிழந்ததால் பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளன.

இந்நிலையில் யஷ்வந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் நிவாரண நிதி அறிவித்தார். CORONA தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதே சுகாதாரத்துறை அமைச்சர் சிக்பள்ளாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட மக்களில் CORONA-ல் இறப்பவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கான (பி.பி.எல்.) ரேஷன் அட்டையை வைத்து இருக்கும் குடும்பங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியையும் படிங்க…

 மக்களின் நலன் கருதி CORONA கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்..!!  

இந்த திட்டம் மூலம் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். இந்த திட்டம் கர்நாடகத்தில் CORONA பரவல் தொடங்கியது முதல் இதுவரையில் வைரஸ் தொற்றால் பலியான பி.பி.எல். ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment