CORONA : மூன்றாம் அலை தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா- சுகாதாரத்துறை தகவல்..!!
CORONA தொற்று நாடு முழுவதும் பரவி பல்வேறு உயிர்களை பழிவாங்கியது. மேலும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் வர்த்தகம் என ஒன்றையும் விட்டுவைக்காமல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் CORONA-ன் மூன்றாம் அலை தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
மூட்டு வீக்கம், எலும்புகள் வீக்கம் சிறந்த தீர்வு -வரகு அரிசி..!!
CORONA என்னும் தொற்று நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது. முதலாம் அலையின் போது நாட்டின் ஒரு பகுதியை கதிகலங்க வைத்தது. அது சற்று குறைந்து மக்கள் தங்களின் இயல்பு நிலையை தொடங்குவதற்கு முன்பே இரண்டாம் அலை வீச தொடங்கியது. இந்த இரண்டாம் அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று.
இதற்காக தடுப்பூசிகளையே நம்பிய நிலையில் COVAXIN, COVISHELD, SPUTNIK V ஆகிய 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதற்குள் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி விட்டது CORONA மூன்றாம் அலை.இந்த மூன்றாம் அலை குறித்த அச்சம் அனைவரிடமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க…
நடைப்பயிற்சி(Walking): ஏற்படும் ஏராளமான நன்மைகள் !!
ஆனால் தென் ஆப்பிரிக்கா அதனை எதிர்கொண்டு விட்டது. இந்நிலையில் அந்த நாட்டில் ஒரு நாளில் 9149 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இந்த பாதிப்பை குறைக்க தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மூன்றாம் அலை குழந்தைகளை வெகுவாக பாதிக்கும் என பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.