CORONA தொற்று அதிகம் உள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவை..!!
இந்த செய்தியும் படிங்க…
SSY(செல்வமகள் சேமிப்பு திட்டம்): கணக்கு தொடங்குவது எப்படி.? என்னென்ன பயன்கள்..??
தமிழகத்தில் ஏற்கனவே JUNE 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய LOCKDOWN அமலில் உள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் CORONA பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சுகாதாரத்துறை, அரசுத்துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், LOCKDOWN நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியும் படிங்க…
வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!!
இதன்படி, CORONA பரவல் குறையாத 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 30 மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாகவும், CORONA பரவல் அதிகம் உள்ள 8 மாவட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் LOCKDOWN தொடரவும்,CORONA தொற்று குறைந்துள்ள பிற மாவட்டங்களில் மால்கள் மற்றும் பெரிய கடைகளை திறப்பதற்கும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.