CO-OPERATIVE BANK- நகை கடன் தள்ளுபடி விபரங்கள் சேகரிப்பு..!!
கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளின் விபரங்கள், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்படும் என தெரிகிறது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஐந்து பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
இந்தச் செய்தியையும் படிங்க…
AADHAAR – PAN இணைப்பு: JUNE 30 கடைசி தேதி..!!
மாநில தலைமை கூட்டுறவு வங்கி அறிவுறுத்தலின் படி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகை அடமானம் வைத்தவர்கள் விபரம், தொகையினை தலைமைக்கு அனுப்பி வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், கடந்த பிப்., மாதம் வரை ஐந்து பவுன் நகை அடமானம் வைத்தவர்கள் விபரங்களை அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். இதில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே நகை அடமானம் வைத்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளுடன், விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.