Cholesterol:குறைக்க எளிய வழிகள்..!! - Tamil Crowd (Health Care)

Cholesterol:குறைக்க எளிய வழிகள்..!!

 Cholesterol: குறைக்க எளிய வழிகள்..!!

நம்முடைய உடலின் பல முக்கிய செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெற Cholesterol மிகவும் அவசியம். நம்முடைய செல்கள் Flexible  இருக்க, பல்வேறு ஹார்மோன்கள் உற்பத்தியாக, சில Vitamins  கரைய என கொழுப்பின்றி உடல் இயக்கம் இல்லை என்றே கூறலாம். உடலுக்குத் தேவையான கொழுப்பை நம்முடைய Liver  உருவாக்குகிறது.

இந்த செய்தியும் படிங்க…

“DO NOT SKIP YOUR BREAKFAST – காலை உணவை தவிர்க்காதீர்கள்”..!!  

அளவுக்கு மிஞ்சும் போது கொலஸ்டிராலும் கெடுதல் ஆகிறது. அது மட்டுமின்றி Cholesterol  சேமிக்கப்படும் இடங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. Cholesterol  தண்ணீரில் கரையாது. அதிகப்படியான கொலஸ்டிரால் ஒரு இடத்தில் படியும்போது அது மாரடைப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

கொழுப்பில் Good Fat, Bad Fat என்று சில வகைகள் உள்ளன. LDL  Cholesterol  ரத்த நாளங்களில் படிகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. நல்ல கொழுப்பானது ரத்த நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கிறது. இதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றிப் பார்ப்போம்!

உணவில்  MONO UNSATURATE வகை கொழுப்புக்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது ரத்தத்தில் LDL கொழுப்பைக் குறைக்கும். நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், அவகேடோ பழம், வால்நட், பாதாம் போன்றவற்றில் இந்த வகை கொழுப்பு அதிகமாக உள்ளது.

டால்டா, வனஸ்பதி போன்ற ஹைட்ரஜனேஷன் செய்யப்பட்ட கொழுப்பு வகைகளைக் குறைவாக எடுத்துக்கொள்ளலாம். இது உடலில் டிரான்ஸ் கொழுப்பு அளவு அதிகரிக்காமல் தடுக்கும். டிரான்ஸ் ஃபேட் அளவு அதிகரித்தால் அது எல்டிஎல் மற்றும் மொத்த கொழுப்பு அளவை அதிகரிக்க செய்துவிடும்.

உணவில் தண்ணீரில் கரையக் கூடிய நார்ச்சத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது வயிற்றில் வாழும் பாக்டீரியா காலணியின் செயல்திறனை மேம்படுத்தும். எல்டிஎல் போன்ற கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.

தினசரி உடற்பயிற்சி செய்வது இதயத்தைப் பாதுகாக்கும். அதனுடன் கொழுப்பு அளவைக் குறைக்கவும் உதவும்.

இந்த செய்தியும் படிங்க…

உடல் எடையை குறைக்க – எளிய வழிமுறைகள் !!  

உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும். உடல் பருமனாக உள்ளவர்களுக்கு அதிக அளவில் கொலஸ்டிரால் கிரகிக்கப்படுகிறது, அதனுடன் அதிக அளவில் கல்லீரல் உற்பத்தியும் செய்கிறது. இதைத் தவிர்க்க ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

Leave a Comment