CBSE தேர்வு: மாணவர்கள் யாருக்காவது திருப்தி இல்லை- கொரோனாவுக்கு பின் தேர்வு.??
தமிழகத்தில் PLUS TWO வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் CBSC PLUS TWO பொதுத் தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த செய்தியையும் படிங்க…
BREAKING NEWS: ஆசிரியர் தகுதித் தேர்வு TET சான்றிதழ்-ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்..!!
இந்நிலையில் PLUS TWO மாணவர்களை எந்த அடிப்படையில் தேர்ச்சி பெற வைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் அது குறித்த முடிவு எட்டப்படும் எனவும் CBSC கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான வழிமுறைகளை கல்வி நிபுணர்கள் ஆராய்ந்து ஒரு முடிவை எடுப்பார்கள் என CBSC செயலாளர் அனுராக் திரிபாதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இப்படி உருவாக்கப்படும் தேர்வு முறைகள் குறித்து மாணவர்கள் யாருக்காவது திருப்தி இல்லை என்றால், கொரோனாவுக்குப் பிறகு அவர்கள் மறு தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.