CBSC PLUS TWO தேர்வு: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!
CBSC 12th STD பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த செய்தியையும் படிங்க…
இந்தியாவில் COVID- அடுத்த அலையை கணிக்க இயலாது-WHO..!!
கரோனா(CORONA) பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்தCBSC 10th தேர்வை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த 12th STD தேர்வுகளை ஒத்திவைத்தும் CBSC அறிவித்தது.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி 12th STD தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து, 12th STD பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ராஜ்நாத் சிங், அமித் ஷா, மத்திய கல்வி செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு 12th STD தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.