CBSC மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய- குழு அமைப்பு..!!
கரோனா CORONA தொற்று பரவல் காரணமாக CBSC PLUS TWO பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிபீடு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா Corona தொற்று பரவல் காரணமாக நடைபெற இருந்த CBSE Plus Two பொதுத்தேர்வை ரத்து செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த செய்தியையும் படிங்க…
PLUS TWO தேர்வு நடைபெறுமா.? ரத்தாகுமா.?
இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு எந்தவகையில் மதிப்பெண் வழங்குவது என்கிற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு செய்வது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக 10 நாள்களுக்கும் அறிக்கை வழங்கும் என CBSC நிர்வாகம் தெரிவித்துள்ளது.