BREAKING: PLUS TWO பொதுத் தேர்வு -இன்று மாலை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!! - Tamil Crowd (Health Care)

BREAKING: PLUS TWO பொதுத் தேர்வு -இன்று மாலை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!!

BREAKING: PLUS TWO பொதுத் தேர்வு -இன்று மாலை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!!

தமிழகத்தில்PLUS TWO பொதுத் தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்ற சஸ்பென்ஸ் நீடித்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று மாலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Central Government, CBSC PLUS TWO பொதுத்தேர்வை ரத்து செய்த பின்னர் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ,மத்திய பிரதேசம், குஜராத் ,ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன.

 இந்த செய்தியையும் படிங்க…

 PLUS TWO தேர்வு நடைபெறுமா.? ரத்தாகுமா.?

ஆனால் PLUS TWO தேர்வு குறித்து கல்வியாளர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களிடம் ஆலோசனை செய்து அதன் பின் முடிவை தெரிவிப்போம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆலோசனை நடந்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களிடம் CEO அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்ய உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு காணொளி மூலம் இந்த ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் இந்த ஆலோசனையில் நடந்த விவரங்களை நாளை முதலமைச்சரிடம் அவர் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment