BREAKING NEWS:10,12th மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வு; மார்ச்சில் பொதுத்தேர்வு – அமைச்சர் அறிவிப்பு..!!
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. அதில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துரையாடிய அவர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வும் மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வும் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல்வரின் அனுமதி பெற்று அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.