BREAKING NEWS: PF- ஏப்ரல் முதல் அபராதம் விதிக்கப்படுமா..??
புதிய நிதியாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படும். அதேப்போன்று இம்மாதம் ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தபால் அலுவலக டெபாசிட், தபால் அலுவலக மாத வருமான திட்டம், சிட்டிசன் சேமிப்பு திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்பவர்களுக்கு இனி நேரடியாக வட்டி கிடையாது. முதலீடு செய்தவர்கள் தங்களுடைய சேமிப்பு கணக்கை வங்கி அல்லது தபால் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன்பிறகு வங்கி கணக்கிற்கு வட்டி வரும்.
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பிஎஃப் கணக்கில் வருடத்திற்கு 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
கிரிப்டோகரென்ஸி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வருடத்திற்கு 30% வரி செலுத்த வேண்டும்.