BREAKING NEWS: NEET தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் : சாய்ஸ் முறையில் பதில் அளிக்கும் முறை அறிமுகம்..!! - Tamil Crowd (Health Care)

BREAKING NEWS: NEET தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் : சாய்ஸ் முறையில் பதில் அளிக்கும் முறை அறிமுகம்..!!

BREAKING NEWS: NEET  தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் :  சாய்ஸ் முறையில் பதில் அளிக்கும் முறை அறிமுகம்..!!

NEET தேர்வு முறையில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, சாய்ஸ் அடிப்படையில் பதில் அளிக்கும் முறை இந்தாண்டு முதல் அறிமுகமாகியுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான NEET தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், NEET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவும் தொடங்கியது.

ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு 11.50 மணிவரை NEET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. NEET தேர்வு நடைபெறும் மூன்று நாட்களுக்கு முன்பு தேர்வாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, NEET தேர்வு முறையில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, சாய்ஸ் அடிப்படையில் பதில் அளிக்கும் முறை நடப்பாண்டு முதல் அறிமுகமாகியுள்ளது.

வழக்கமாக NEET  தேர்வில் 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற நிலையில், இந்தாண்டு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, சாய்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பாடத்திலும்

 ஏ பிரிவில் 35, 

பி பிரிவில் 15 

என 4 பாடங்களுக்கு தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறவுள்ளன.

  • இவற்றில் 180 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது. விடைத்தாளில் தவறான விடை அளித்தால் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.
  • பதில் அளிக்காத கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது என்ற பழைய நடைமுறையே தொடரும்.
  • இதனிடையே, NEET தேர்வில் மலையாளம், பஞ்சாபி மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இனி 13 மொழிகளில் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

 

Leave a Comment